ரொனால்டோவுக்கு சர்ப்ரைஸ் பரிசு கொடுத்து அசத்திய அவரது மனைவி

0
19

ரொனால்டோ கால்பந்து உலகின் முன்னணி நபராக இருந்து வருபவர் அவருக்கு அவரது மனைவி கிறிஸ்மஸ் பரிசாக பல கோடி மதிப்புடைய ரோல்ஸ் ராயல்ஸ் காரை பரிசாக கொடுத்து அசத்தியுள்ளார்.

போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ சிறந்த கால்பந்தாட்ட வீரர் இவர் சிறுவயது காலங்களில் தந்தை தோட்டக்காரராக பணிப்புரிந்து ரொனால்டோ குடும்பத்தை காப்பாற்றி வந்தார். அப்போது மிகவும் வறுமை சழுந்து காணப்படும் தனது கடும்பத்தை பற்றி கவலை கொள்வார். இவருக்கு சகோதர சகோதரிகள் என இவரது குடும்பம் பெரியது தந்தையின் குறைந்த சம்பளத்தை மட்டுமே அந்த பெரிய குடும்பம் நம்பியிருந்தது.

அவர் சிறுவயது வாழ்வில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் போது கூட அவருக்கு நல்ல உடை நல்ல உணவு என்பது கிடைக்காது. பிறரை பார்த்து ஏங்கியும் இருப்பதை அவரே கூறி உள்ளார். இப்படி குடும்ப வறுமை சூழ்ந்த அந்த நேரங்களில் தனது தன்னம்பிக்கையால் இன்று உலக கால்பந்து ஆட்டத்தில் முடிமுனியாக திகழ்ந்து இருக்கிறார்.

ரொனால்டோவுக்கு சர்ப்ரைஸ் பரிசு கொடுத்து அசத்திய அவரது மனைவி

போர்ச்சுக்கல் நாட்டிற்காக விளையாடிய கிறிஸ்டியானோ பல வெற்றிகளை தந்துள்ளார். இருப்பினும் தனது கனவான உலக கால்பந்து கோப்பையை அந்த நாட்டிற்காக அவரால் வழங்க முடியவில்லை என்ற ஏக்கத்துடன் இந்தாண்டு நடைபெற்ற பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியிலும் இருந்து வெளியேறினார்.

அவருக்கு இந்த உலக கோப்பை தொடர் கடைசியாக இருப்பதால் உலக கோப்பையை பெற முடியவில்லையே என்ற ஏமாற்றத்தில் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுது வெளியேறினார். மேலும், அவரது 15 வயதில் அவருக்கு ஏற்பட்ட அறுவை சிகிச்சை போன்ற பல இன்னல்களுக்கு ஆளாகிய போதும் நம்பிக்கையுடன் செயல்பட்டு கால்பந்து உலகின் ஜாம்பாவான் என்று அழைக்கப்படும் நபராக இருந்து வருகிறார்.

இவருக்கு கிஸ்மஸ் பரிசை வழங்க முடிவு செய்த அவரது மனைவி அவருக்கு சர்ப்ரைசாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள ரோல்ஸ் ராயல்ஸ் காரை அவருக்கு பரிசாக அளித்து அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ரோனால்டோ ஓரு தீவிர கார் ரசிகர் எனவே அவருக்கு பரிசாக இந்த காரை வழங்கியுள்ளார் அவரது மனைவி. இந்த காரின் மதிப்பு 7 கோடிக்கு மேல் இருக்கும் என குறிப்படப்படுகிறது.

இந்த காரில் ரோல்ஸ் ராய்ஸ் டான் (Rolls Royce Dawn), 6.6L ட்வின்-டர்போ V12 எஞ்சினால் இயக்கப்படுகிறது.

இந்த மோட்டருக்கான உச்ச ஆற்றல் வெளியீடு 564 குதிரைத்திறனாக மதிப்பிடப்பட்டுள்ளது. 4.3 வினாடிகளில் மணிக்கு 100 கி.மீ. செல்லக்கூடியது. எல்லாவற்றிற்கும் மேலாக, இது உலகின் மிக ஆடம்பரமான டாப்லெஸ் கார்களில் ஒன்றாகவும் உள்ளது. ஏற்கனவே ரொனால்டோவிடம் மிக விலை உயர்ந்த கார்கள் இருக்கும் பட்சத்தில் இதுவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்: கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வாழ்க்கையும் சொத்து மதிப்பு

இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here