இந்தியாவின் செல்லப் பிராணியான சிவிங்கிப் புலியின் வரலாறு

0
9

சிவிங்கிப் புலி: ஒரு காலத்தில் மன்னர்களாலும் மக்களாலும் செல்லப் பிராணியாக வளா்க்கப்பட்ட சிவிங்கிப் புலிகள் தற்போது இந்தியாவில் முற்றிலுமாக அழிந்துவிட்டது. சுமாா் 85 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா வனப்பகுதிகளில் சிவிங்கிப் புலிகள் வாழ்ந்து வந்துள்ளன. ஆனால் தற்போது ஆப்பிரிக்காவில் மட்டும் 7,000 என்ற எண்ணிக்கையில் சுருங்கி விட்டது. இந்தியாவில் 1952 ம் ஆண்டே அழிந்த விலங்கினமாக சிவிங்கிப் புலிகள் அறிவிக்கப்பட்டு விட்டன.

இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் அழிவுக்கு முக்கிய காரணம் வேட்டையாடப்பட்டதுதான் என்கிறது ஒரு ஆய்வு. காட்டில் உள்ள விலங்குகளை வேட்டையாடுவதற்காக இந்தியாவில் பலரும் சிவிங்கிப் புலிகளை வீட்டில் வளா்தததாக ஆய்வுகள் தொிவிக்கின்றன. 1878 ம் ஆண்டு வரையப்பட்ட ஒரு ஓவியத்தில் ஒவ்வொரு வீட்டின் முற்றத்திலும் ஒரு செல்ல நாய்க்குட்டி போல சிவிங்கிப் புலிகள் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்ததாக காட்டப்பட்டுள்ளது.

வேட்டைக்காக பழக்குவதிலும் காடுகள் அழிப்பினாலும் சிவிங்கிப் புலிகளின் இனம் மெல்ல மெல்ல அழிந்துள்ளது. குறிப்பாக ஆங்கிலேயா்களும், மன்னா்களும், முகலாய அரசர்களும் சிவிங்கிப் புலிகளை அதிகளவில் வேட்டையாடி உள்ளனா். 1947 ம் ஆண்டு தற்போதைய சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள கொரியாவின் மன்னர் கடைசியாக 3 சிவிங்கிப் புலிகளை வேட்டையாடி புகைப்படம் எடுத்துள்ளார். சிவிங்கிப் புலிகள் அழிந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகுதான் 1972 ல் இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்பு சட்டமே கொண்டுவரப்பட்டது. சுதந்திர இந்தியாவில் அழிந்து போன ஒரே விலங்கினம் சிவிங்கிப் புலிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

sivingi puli

 

சிவிங்கிப் புலி, சிறுத்தை இரண்டுமே பூனை குடும்பத்தைச் சேர்ந்த பெரிய விலங்குகளாகும். சிறுத்தையைப் போன்றே சிவிங்கிப் புலிகளின் உடலிலும் கருப்பு நிற புள்ளிகள் காணப்படும். ஆனால் சிவிங்கிப் புலிகளின் உடலில் உள்ள புள்ளிகள் முழு வட்ட வடிவில் இருக்கும். இப்புலிகளின் இரு கண்களை ஒட்டி கண்ணீர் கோடுகள் இருக்கும். இது வட்ட முகம் கொண்டது. சிவிங்கிப் புலியின் உடல் மெலிந்ததாகவும், வயிற்றுப் பகுதி குறுகியும், நீண்ட கால்கள் உடையதாகவும் காணப்படும். இதனால் இவைகள் 3 நொடியில் மணிக்கு 100 கிமீ வேகத்தை தாண்டி விடும். தற்போது வந்துள்ள விலையுயர்ந்த கார்கள் கூட இவ்வளவு குறைவான நேரத்தில் இந்த வேகத்தை எட்ட முடியாது. மரம் ஏறும் பழக்கம் இப்புலிகளுக்கு உண்டு. இரையை படு வேகத்தில் வேட்டையாடி மரத்தின் மீது கொண்டு சென்று சாப்பிடும் பழக்கம் கொண்டவை.

சிவிங்கிப் புலிகள் அழிந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு மோடி அவர்களின் பிறந்த நாளான நேற்று நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கிப் புலிகள் மத்தியப் பிரதேசம் குனோ உயிாியல் பூங்காவில் பிரதமர் அவர்களால் திறந்து விடப்பட்டது. அவைகளின் இனம் இந்தியாவில் மீண்டும் பெருகுவதற்காக அவைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here