மோகன்லால்: மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அவர் தற்போது முதல்முறையாக ‘போரோஸ் கார்டியன் ஆஃப் டிரஷ்ஷர்ஸ்’ என்ற படத்தை இயக்குகிறார். இந்த படம் 3டியில் உருவாகும் பீரியட் படமாகும். வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு வந்தபோது இங்கு அவர் குவித்த சொத்துக்களை பாதுகாக்க ‘போரோஸ்’ என்ற பாதுகாவலனை நியமிக்கிறார். அந்த பாதுகாவலனாக மோகன்லால் நடிக்கிறார். கடந்த ஆண்டு தொடங்கிய படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு டிசம்பரில் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை பள்ளியில் படித்த லிடியன் நாதஸ்வரம் என்ற சிறுவன் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். இவர் படத்தில் இடம் பெறும் பாடல்களுக்கு இசையமைக்கிறார். பின்னணி இசைக்காக ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ‘ஸ்கை டீப் புளு’, ‘சீ-3’, ‘ஐ இன்த ஸ்கை’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.