ஆண்டு முழுவதும் கொடுத்த பலனை தரும் ஆடி அமாவாசை நன்நாளானது ஜூலை 28ம் தேதியான நாளை வருகிறது.
அமாவாசை தினமானது மாதமாதம் வருகிறது இருந்தாலும் தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை, ஆடி அமாவாசை விமர்சையானதாக பார்க்கப்படுகிறது. அமாவாசைகளில் தர்பணம் செய்வது சிறப்புக்குரியதாக உள்ளது. அதிலும், ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்பணம் செய்வது மிகவும் சிறப்புக்குரியதாக காணப்படுகிறது.
சூரியனும் சந்திரனும் ஓரே நேர்கோட்டில் அமையும் தருனமே அமாவாசை நாளாக கருதப்படுகிறது. பொதுவாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிதுர் காரியம் செய்ய காசி, ராமேஸ்வரம், திருவெண்காடு, ஸ்ரீவாஞ்சியம், கயா, மற்றும் அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் ஆகிய 6 தலங்கள் சிறந்த தலங்களாக கருதப்படுகிறது.

அங்கு செல்ல முடியாதவர்கள் தங்களால் முடிந்த இடத்திற்கு சென்று தர்பணம் செய்து தம் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெறலாம். ஆடி அமாவாசையன்று பிதுர் தர்பணம் செய்து முடித்து வறுமையில் வாடும் மனிதர்களுக்கு ஓரு வேலை உணவினை தானமாக கொடுப்பது பெரும் புண்ணியமாக கருதப்படுகிறது. மேலும், பசுவிற்கு அகத்திக்கீரை மற்றும் வாழைப்பழம் வழங்குவதும் சிறப்புக்குரியதாக உள்ளது. காக்கைக்கு உணவளிப்பது, பூனைக்கு உணவளிப்பது சிறப்பு.
அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் உள்ள கடல் அல்லது நதியில் நீராடலாம். அமாவாசை அன்று விரதம் இருந்து பூஜை மேற்கொண்டு உணவருந்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அது முடியாதவர்கள், ஆடி அமாவாசையில் தர்ப்பணம் கொடுத்தாலே, ஆண்டு முழுவதும் தர்ப்பணம் கொடுத்த பலன் கிடைத்து விடும்.
இதுபோன்ற ஆன்மீகம் மற்றும் செய்திகளை பெற தலதமிழ் இணையதளத்தை அனுகவும்.