நவராத்திரியில் கொலு பொம்மைகளை வைக்கும் முறைகள்

0
9

நவராத்திரியில் கொலு பொம்மைகளை வைக்கும் முறைகள்: நவராத்திரி என்றாலே நினைவுக்கு வருவது கொலு பொம்மைகளும் நெய்வேதிய சுண்டல் மற்றும் சர்க்கரை பொங்கலும். நவராத்திரி தொடங்கும் முதல் நாள் முதல் 9 நாட்களுக்கு கொலு பொம்மைகளை வைத்து அதற்கு தீப ஆராதனைகள் புஷ்ப அலங்காரம் நெய்வேதியம் செய்து அக்கம் பக்கத்து வீட்டில் இருப்பவர்களை மிக முக்கியமாக சுமங்கலி மற்றும் குழந்தைகளை அழைத்து அவர்களுக்கு தாம்பூலம் மற்றும் நொய்வேதிய பலகாரங்களை கொடுத்து பாடல் பாடி மகிழ்வர்.

இது போன்ற விழாக்களின் மூலம் நல்ல அன்பு, சகோதரத்துவம், பண்பு என அனைத்தும் நிறைந்து இருக்கும். அக்கம் பக்கத்து வீட்டாரின் பண்புகளை அறிந்து கொள்ளவும் நட்புடன் பழகிடவும் ஓரு வாய்பாக இருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை. இந்த நவராத்திரியில் கொலு பொம்மைகளை எப்படி வைப்பது என்று பாரம்பரியமாக நவராத்திரியை கொண்டாடும் அனைவருக்கும் தெரியும். எனினும், தெரியாதவர்களுக்கு இந்த பதிவின் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இப்பதிவில் கொலு பொம்மைகளை எப்படி அமைப்பது என்பதை தெளிவாக அறியலாம்.

மகிசாசூரனை வதம் செய்த 9 நாட்களை தான் நாம் நவராத்திரி விழாவாக பூஜித்து மகிழ்கிறோம். நம்முள் இருக்கும் நல்ல எண்ணங்கள், திறமைகளை ஒன்றிணைத்து, நம் தீய எண்ணங்களை அழிப்பது தான் நவராத்திரி விழாவின் முக்கியத்துவமாகவும் பார்க்கப்படுகின்றது. இந்த நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வாக கொலு வைக்கப்பது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படும் நிகழ்வாக இருந்து வருகிறது.

நவராத்திரியில் கொலு பொம்மைகளை வைக்கும் முறைகள்

கொலு பொம்மைகள் வைப்பதன் காரணம்:

உலக உயிர்களின் உணவுச் சங்கிலி தொடர்பினை விளக்குவதற்காகவும் மனிதனின் உயர்ந்த வாழ்க்கையின் பயணத்தை விளக்குவதற்காகவும் மெய்ஞான தத்துவத்தையும் மெய்ஞான தத்துவத்தையும் விளக்குவதற்காகவும் அனைவரும் குடும்பமாய் இருந்து ஓற்றுமையை பேணுவதற்காகவும், மாகாளியான பார்வதி தேவி மகாசூரனை அழித்த 9 நாட்களை குறிக்கும் வண்ணமும் கொலு பொம்மைகள் வைக்கப்படுவது மரபாக உள்ளது.

இதையும் அறிந்து கொளுங்கள்: பகாசுரன் என்பவன் யார்? மகாபாரத கதைக்கும் இவனுக்கும் என்ன தொடர்பு

எத்தனை படிகள் வரை வைக்கலாம்:

கொலுப் படிகள் 5 அல்லது 7 அல்லது 9 அல்லது 11 படிகள் வைக்கலாம். இரட்டைப்படை எண் வராமல் ஓற்றைப்படை எண்ணில் படி வரிசை அமைய வேண்டும். வீட்டின் சவுகரியத்திற்கு ஏற்றப் போல கிழக்கு மேற்காக இருக்குமாறு படிகளை அமைக்க வேண்டும். இப்போதெல்லாம் ரெடிமேட் ஆக, படிகள் கிடைக்கின்றன. நம் வீட்டு ஹாலின் அளவுக்குத் தகுந்த மாதிரி, இவற்றை வாங்கி வைத்துக் கொள்ளலாம். கொலுவின் முன்னால், விளக்கேற்ற, வருபவர்கள் உட்கார, கொலுவைப் பார்க்க, இதற்குத் தகுந்தாற்போல, இடத்தைத் திட்டமிட்டுப் படிகளை அமைப்பது நல்லது.

கொலு பொம்மைகளை அமைக்கும் முறைகள்:

இந்த படிகள் அமைக்கும் முறைக்கும் தொல்காப்பியரின் உயிரின் அறிவை பிரித்ததற்குமான ஓற்றுமை காணப்படும். தொல்காப்பியர் ஓரறிவு உயிர், ஈரறிவுயிர் என 6 அறிவு உயிர் வரை பிரித்து காட்டுவார். அதுபோல முதலாவது படியில் இருந்து அதன் ஓற்றுமை உள்ளது போல காணப்படும்.

முதலாம் படி: ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகள்.

இரண்டாம் படி : ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.

மூன்றாம் படி : மூன்றறிவு உயிர்களான கரையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள்.

நாலாம்படி : நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகள்.

ஐந்தாம்படி : ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள.

ஆறாம்படி : ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.

ஏழாம்படி : மனித நிலையிலிருந்து உயர்நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள்.

எட்டாம்படி : தேவர்கள், அஷ்டதிக்குப் பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் மற்றும் தேவதைகளின் பொம்மைகள்.

ஒன்பதாம்படி : பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் வைக்கவேண்டும்.

இவ்வாறாக படிகளை அமைத்து தாம் விரும்பும் பொம்களையும் வைத்து நவராத்திரி விழாவினை நல்முறையில் ஓற்றுமையுடன் கூடி மகிழ்ந்து வழிபடலாம்.

இது போன்ற தகவல்களுக்கும் ஆன்மீகம், ஜோதிடம், பண்டிகைகள், தமிழ் இலக்கியம், நகைச்சுவைகள், உடல்நலம், சினிமா, செய்திகள் என அனைத்து தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை படியுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here