பூசணி விதையை எப்படி சமைத்து சாப்பிடுவது

0
24

பூசணி விதையை எப்படி சமைத்து சாப்பிடுவது: இயற்கையாக கிடைக்கக் கூடிய பூசணியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. பூசணியை போல பூசணி விதையும் மனித உடலுக்கு மிக தேவையான ஓன்றாக இருக்கின்றது. இதன் நன்மைகள் ஏராளம் ஆண்களுக்கு விந்தணுவின் வீரீயத்தையும் தரத்தையும் அதிகரிக்க உதவுகின்றது. தூக்கமின்றி அவதியுற்று வருபவர்களுக்கு அருமருந்தாக இருக்கின்றது. நீரிழிவு நோய்களை கட்டுப்படுத்தவும், உடல் பருமனை குறைக்கவும் பயன்படுகிறது.

கிட்னி பிரச்சனைகளுக்கும் அருமருந்தாக இருக்கின்றது. இப்படி பல்வேறு உடல் பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் அருமருந்தாகவும் இருந்து வரும் பூசணி விதையை எப்படி சாப்பிடுவது என்று பலருக்கு கேள்வியாக இருக்கும் நிலையில் அதை எப்படி உட்கொள்வது என்பதை இப்பதிவில் அறியலாம்.

பூசணி விதையை எப்படி சமைத்து சாப்பிடுவது

பூசணி விதையை சாப்பிடும் முறைகள்:

மஞ்சள் நிற பூசணியை எடுத்து அதன் காம்பு பகுதியை சுற்றி கத்தியை வைத்து வட்ட வடிவமாக அறுத்தால் பூசணியில் உள்ள விதைகளை அப்படியே எடுத்து விடலாம். பின்னர், அதை நன்றாக கழுவி தட்டில் போட்டு காய வைத்து விடவும்.

அந்த விதையை சமைத்தும் சாப்பிடலாம் அல்லது அப்படியே காய்ந்த விதையை வாயில் போட்டு கிடைக்கும் நேரங்களில் சாப்பிட்டு வரலாம். இப்படி சமைக்காமல் சாப்பிடும் பூசணி விதைகளால் பல்வேறு விதமான நன்மைகள் நமக்கு கிடைக்கும். இந்த விதையை வானலில் போட்டு அப்படியே உப்பு போட்டு அதன் மீது தேவை எனில் தேவைக்கேற்ப மிளகாய் தூளை தூவி வறுத்தும் சாப்பிடலாம்.

மேலும், இந்த பூசணி விதையை நன்றாக மிக்சியில் அரைத்து பொடி செய்து வைத்து கொள்ளலாம். புதுமண தம்பதிகளுக்கு தினமும் இரவு பாலில் இந்த பூசணி விதை  பொடியை போட்டு குடித்து வந்தால் குழந்தை பாக்கியம் கிடைத்து நல்ல பலனை அடையலாம்.

இதையும் படியுங்கள்: குழந்தை வரம் அருளும் பூசணி விதை எண்ணற்ற நன்மைகளை உடையது

இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here