குளிர்காலத்தில் முக வறட்சியை தடுக்க சில வழிமுறைகள்

0
4

குளிர்காலம் வந்துவிட்டாலே வறண்ட சருமம், முக சுருக்கங்கள் என படையெடுக்க ஆரம்பித்துவிடும். இதை தடுப்பதற்கான சில ஃபேஸ் பேக டிப்ஸ்கள்.

  • முட்டையின் வெள்ளைக்கருவுடன் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து பேஸ்டாக்கி சுருக்கங்கள் உள்ள பகுதிகளில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து கழுவ சரும வறட்சி நீங்கி சுருக்கங்களும் நீங்கும்.
  • தக்காளியை நைஸாக அரைத்து பேஸ்ட்டாக்கி வாயின் ஓரங்களில் மசாஜ் செய்து மீதியை முகத்தில் பேக் போட்டுக் கொண்டு 20 நிமிடங்கள் கழித்து கழுவ சரும சுருக்கங்கள் நீங்கும்.
  • ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் எலுமிச்சைசாறு, ஒரு ஸ்பூன் சூடான நீர் சேர்த்துக் கலந்து முகத்தில் சுருக்கங்கள் உள்ள பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து நீரினால் கழுவினால் சுருக்கங்கள் நீங்கும்.
  • பால் பவுடர், தேன் சேர்த்து கலந்து சுருக்கங்கள் உள்ள பகுதிகளில் பேக் போட்டு 10 நிமிடங்கள் கழித்து காய்ந்ததும் கழுவலாம்.
  • பப்பாளிப் பழத்தை கூழாக்கி முகத்தில் பேக் போட்டு வர நாளடைவில் சுருக்கங்கள் நீங்கி இளமையான தோற்றம் கிடைக்கும்.
  • வாழைப்பழம் தேன் சேர்த்துக் கலந்து பேக் போட்டு வர வறட்சி நீங்கி சுருக்கங்கள் குறைந்து புத்துணர்வான சருமம் கிடைக்கும்.
  • how to get healthy glowing skin in winter

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here