ஏகாதசி சாம்பார் விரதம் இருந்து இறைவனை வழிபட்டவர்களுக்கு சிறப்பான விருந்தாக அமையும் இந்த ஏகாதசி சாம்பார் பலவகையான காய்கறிகளை கொண்டு செய்யப்படும் சாம்பார் மிக சுவையானதாக இருக்கிறது. ஏகாதசி அன்று பெருமாளை ஜெபித்து கொண்டு விரதம் மேற் கொண்டு வருவது ஏகாதசி விரதமாக பார்க்கப்படுகிறது. ஏகாதசி நாளைய அடுத்த நாளான துவாதசி நாளன்று இந்த ஏகாதசி சாம்பார் செய்து உணவு அருந்துவது உடலுக்கும் விரதத்திற்கும் உற்றதாகும். இதனை கதம்ப குழம்பு என்றும் கூறவார்கள்.
ஏகாதசி சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
- துவரம் பருப்பு
- பாசிப் பருப்பு
- கடலைப் பருப்பு
- உளுத்தம் பருப்பு
- தேங்காய்
- புளி
- பச்சை மிளகாய்
- தக்காளி
- மஞ்சள் தூள்

காய்கறிகள்
- முருங்கைக்காய்
- சுண்டைய் காய்
- அகத்திக் கீரை
- நெல்லிக்காய்
- வெண்டைக்காய்
- பூசணிக்காய்
- சுரக்காய்
- மாங்காய்
- உருளைக் கிழங்கு
என அனைத்து விதமான காய்கறிகளையும் சேர்த்து சமைக்கலாம். முக்கியமாக ஏகாதசி சாம்பாரில் நெல்லிக்காய், அகத்திக் கீரை, சுண்டைக் காய் பயன்படுத்த வேண்டும். மேலும், சுண்டல் வகைகளான மொச்சை, கொண்டைக்கடலை, பட்டாணி போன்றவற்றையும் சேர்த்து சாம்பாரில் போட்டு சமைத்து சிறப்பிக்கலாம்.
செய்முறை
- ஊறவைத்துள்ள பருப்பு வகைகளை குக்கரில் வைத்து நன்றாக குழைந்து வரும் வரை விசில் விட்டு இறக்கவும்.
- காய்கறிகளை மனதிற்கு ஏற்றார் போல் சைசாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- தேங்காய், புளி, பச்சைமிளகாய், தக்காளி ஆகியவற்றை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
- வடசட்டியில் எண்ணெய் சிறுது விட்டு காய்ந்ததும் கடுகுகலப்பு போடவும் பின்னர், காய்ந்த மிளகாய், கருவேப்பிளை, பெருங்காயத் தூள் ஆகியவற்றை போடவும்.
- தாளித்து முடித்தவுடன் சர்க்கரை அல்லது வெல்லம் சிறிதளவு சேர்க்கவும்.
- தாளித்து முடிந்தவுடன் அவற்றில் பருப்பு வகைகளையும் காய்கறிகளையும் மிக்சியில் அரைத்து வைத்துள்ள பொருட்களையும் போட்டு தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
- நன்றாக வெந்ததற்கு பிறகு சாம்பார் பொடி, உப்பு, கொத்தமல்லி இலையை போட்டு சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
இப்படி செய்து வந்தால் ஏகாதசி சாம்பார் தாயாராகி விடும். சுடச்சுட சாதம் போட்டு அதில் இந்த சாம்பாரை ஊற்றி உண்டால் அமிர்தமாக இருக்கும்.
இதையும் படியுங்கள்: வைகுண்ட ஏகாதசி 2023 எப்போது கொண்டாடப்படுகிறது
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.