பானிபூரி செய்வது எப்படி? முழுத் தகவல்கள்

0
21

பானிபூரி செய்வது எப்படி? – இந்தியாவின் வடக்கில் அதிகமாக விரும்பும் உணவு வகைகளில் ஓன்று பானிபூரி. இன்று தமிழ்நாட்டிலும் அனைத்து ஊர்களிலும் மாலை வேலைகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் திண்பண்டங்களுள் முக்கியமானதாக இன்று உள்ளது.

அதுமட்டும் அல்லாது ஓரு சைக்கிளில் பானிபூரி முழுவதுமாக வைத்து கொண்டு பானிபூரியை வடநாட்டினர் விற்பனை செய்து வருகின்றனர். பூரியில் அவர்கள் வைக்கும் உருளைக்கிழங்கு மசாலா மற்றும் அதற்கு மசாலா தண்ணீர் ஓன்றும் தரப்படுகிறது. அவை மேலும் சுவை உடையதாக இருக்கிறது.

இப்படி அனைவரும் விரும்பும் பானிபூரியை வீட்டிலேயே செய்யலாம் வாங்க. தெருக்களில் விற்கும் பானிபூரியும் விலை அதிகமாக உள்ளது. வீட்டிலேயே செய்வதால் காசும் மிச்சமாகும் நாம் செய்த பானிபூரி என்பதாலும் எளிய பொருட்களை கொண்டு செய்வதாலும் அதிகமாகவும் உண்ணலாம். நம் வீட்டிலேயே செய்வதால் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

பானிபூரி செய்வது எப்படி? முழுத் தகவல்கள்
பானிபூரி செய்வது எப்படி? முழுத் தகவல்கள்

பூரி செய்ய தேவையான பொருட்கள்

ரவை – அரை கப்

மைதா – அரை டீஸ்பூன்

பேக்கிங் சோடா – ஓரு சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

பானி செய்ய தேவையான பொருட்கள்

கொத்த மல்லி – சிறயகட்டு

பொதினா – சிறியகட்டு

பச்சைமிளகாய் – 2 அல்லது 3

புளி சிறிதளவு எடுத்து தண்ணீரில் ஊர வைக்கவும்

சிறிய எலுமிச்சை பழம் சாறு எடுத்தது

மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்

சீரகம் தூள் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கு ஏற்ப

தண்ணீர் -ஓன்றரை லிட்டர்

மசாலா செய்ய தேவையான பொருட்கள்

உரளைக்கிழங்கு 2 நன்றாக வெந்து மசிந்தது

மிளகாய் தூள் -அரை டீஸ்பூன்

மிளகுதூள் – கால் டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

மாங்காய் தூள் -1 டீஸ்பூன்

பேலக் சால்ட் – 1 டீஸ்பூன்

வெங்காயம் பொடியாக நறுக்கியது

கொத்தமல்லி கொஞ்சமாக

செய்முறை

முதலில் மிளகு மற்றும் சீரகத்தை நன்கு பொடி செய்து கொண்டு, பின் கொத்தமல்லி, புதினா மற்றும் பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் 1 1/2 லிட்டர் நீரில் ஊற வைத்துள்ள புளியை நன்கு கரைத்து, நீரை வடித்து, அந்த நீரில் அரைத்து வைத்துள்ள மல்லி பேஸ்ட், மிளகு மற்றும் சீரகப் பொடி சேர்த்து கலந்து, அத்துடன் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மைதா, ரவை, பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, பூரி பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு, அத்துடன், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு, மாங்காய் தூள், ப்ளாக் சால்ட், வெங்காயம் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

அடுத்து பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு பூரிகளாக தேய்த்து எண்ணெயில் போட்டு, பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இறுதியில் ஒவ்வொரு பூரியாக எடுத்து, அதனுள் உருளைக்கிழங்கு மசாலா வைத்து, பானி ஊற்றி பரிமாறினால், பானி பூரி ரெடி!!!

அனைவரும் செய்து ரூசித்து சாப்பிட்டு பாருங்கள். சமையல் சார்ந்த செய்திகளையும் கல்வி, அரசியல், விளையாட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தலதமிழ் இணையத்தை பின்பற்றவும் நன்றி.

இது போன்ற சமையல் குறிப்புகள் மற்றும் தகவல்களை தெரிந்துகொள்ள தலதமிழ் இணையதளத்தை பின்தொடரவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here