சளி, இருமலை விரட்டிடும் கொள்ளு ரசம் செய்யும் எளிய வழிமுறைகள்

0
26

சளி, இருமலை விரட்டிடும் கொள்ளு ரசம் செய்யும் எளிய வழிமுறைகள்: நம் முன்னோர்கள் விட்டு சென்ற இயற்கை மருத்துவத்தை மறந்து ஆங்கில மருத்துவ மோகத்தில் இருப்பதால் உடல் அளவில் பாதிக்கப்பட்டுகிறோம். ஆங்கில மருத்துவம் அதிகமாக பயன்படுத்துவதால் மருந்து மாத்திரைகளை எதற்கெடுத்தாலும் எடுத்துக் கொள்வதால் உடல் சூடு அடைகிறது. அதுமட்டுமன்றி மனரீதியாகவும் பணரீதியாகவும் மிகவும் பாதிப்படைகிறோம்.

நம் முன்னொர்களின் இயற்கையாக கிடைக்கும் மருத்துவத்தை மதித்து வாழ்வில் பனிபற்றினால் அனைத்து வித உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் நிறந்தர தீர்வு கிடைக்கும். அவ்வகையில், சளி, இருமல், உடல்வலி, காய்ச்சல் என பல நோய் போக்கியாக விளங்கும் கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும் மற்றும் உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்பு நீங்கும். இப்பதிவில் கொள்ளு ரசம் செய்யும் வழிமுறையை அறியலாம்.

சளி, இருமலை விரட்டிடும் கொள்ளு ரசம் செய்யும் எளிய வழிமுறைகள்

இதையும் செய்து பாருங்கள்: அதிக டீ குடிப்பது ஆயுளை அதிகரிக்கிறது பிரிட்டன் ஆய்வில் தகவல்

கொள்ளு ரசத்திற்கு தேவையான பொருட்கள்:

 • கொள்ளு – 100 கிராம்
 • சீரகம் – ஒரு ஸ்பூன்
 • மிளகு – ஒரு ஸ்பூன்
 • கொத்தமல்லி – அரை ஸ்பூன்
 • கருவேப்பிலை – கொஞ்சமாக
 • கொத்தமல்லி தலை – கொஞ்சமாக
 • பூண்டு 5 பல்
 • தாளிப்பதற்கு ஒரு தக்காளி
 • சிறிது கருவேப்பிலை
 • புளி சிறிதளவு
 • உப்பு தேவையான அளவு
 • மஞ்சள் தூள் தேவையான அளவு
 • பெருங்காயம் தேவையான அளவு
 • நல்லெண்ணெய் – 3 ஸ்பூன்
 • கடுகு சிறிதளவு

கொள்ளு ரசம் செய்யும் முறை:

 1. கொள்ளுலில் உள்ள தூசுகளை நீக்கி சுத்தம் செய்து அதனை வானலில் போட்டு வறுத்து கொள்ள வேண்டும்.
 2. வறுத்த கொள்ளை நன்றாக சூடு ஆறிய பிறகு மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அறைத்து கொள்ள வேண்டும்.
 3. தக்காளி, பூண்டு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மீண்டும் மிக்ஸியில் இட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
 4. அரைத்த பொருட்கள் அனைத்தையும் மறு பாத்திரத்தில் மாற்றி எடுத்துக்கொண்டு, அதில் ஊற வைத்துள்ள புளியை கரைத்து வடிகட்டி அதில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
 5. மொத்த கரைசலுடன், மூன்று டம்ளர் அளவிற்கு தண்ணீரை ஊற்றி அத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
 6. அதன்பின், வானலில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகுகலப்பு, மிளகாய், கருவேப்பிளை போட்டு தாளிப்பு வந்தவுடன் கரைத்து வைத்துள்ள அனைத்தையும் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதிநிலை வந்தவுடன் இறக்கி வைத்தால் சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த கொள்ளு ரசம் தயாராக இருக்கும்.

இதனை அனைவருக்கும் பரிமாறி சாப்பிட உடலில் உள்ள கெட்ட கொழுப்பு நீங்கும் மற்றும் சளி இருமல், உடல் வலி ஆகியவற்றை விரட்டி அடிக்கும் நிவாரணியாக இருக்கும். இந்த கொள்ளு ரசத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணலாம். எந்த கெடுதலும் இல்லாத பாட்டி வைத்தியம் இது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here