இன்ப்ளூயென்ஸா (Influneza) ப்ளூ காய்ச்சல் பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி? என்பது போன்ற பல கேள்விகளுக்கு இப்பதிவில் மூல்ம் அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் தற்போது ப்ளூ வகை வைரஸ் காய்ச்சல் பருவ மாற்றத்தால் அதிக அளவில் குழந்தைகளை பாதித்து வருகிறது. தற்போது பெரியவர்களையும் பாதித்து வருகிறது. இந்த காய்ச்சல் பள்ளி குழந்தைகளுக்கு அதிகமான நிலையில் புதுச்சேரி அரசு 1ம் வகுப்பு முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ப்ளூ வைரஸ் வெயில் மழை பருவநிலையில் மாற்றம் நிலவுவதால் சமனிலை இல்லாததால் வைரஸ் காய்ச்சல் நிலவுவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இதையும் கவனியுங்கள்: கொரோனா தொற்றிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி?

ப்ளூ வைரஸ் காய்ச்சல் என்றால் என்ன?
ப்ளூ காய்ச்சல் இருமல், உடல்வலி மற்றும் பிற அறிகுறிகளை வெளிப்படுத்தும் தொற்று. வைரஸ்களால் காய்ச்சல் ஏற்படுகிறது. மருத்துவரீதியாக இன்ப்ளூயென்ஸா என்கிறோம். இந்த பருவகால காய்ச்சலைத் தவிர உலக அளவில் பன்றிக் காய்ச்சல் மற்றும் பறவைக் காய்ச்சல் இதில் அடங்கும். இவை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ப்ளூ வைரஸின் பொதுவான அறிகுறிகள்:
100 செல்ஷியஸ் காய்ச்சல், சளி, இருமல், மூக்கு ஓழுகுதல், சோர்வு, உடல்வலி, தொண்டை வலி இவைகள் முக்கிய அறிகுறிகளாகும்.
ப்ளூ காய்ச்சல் ஆபத்தானதா?
ஓரு சிலர் இதன் வீரியத்தை தவறாக புரிந்து கொண்டு மருந்துகள் எடுத்துக் கொள்ளாமல் இருப்பர் அதனால் அவருக்கும் அவரை சுற்றி இருப்பவருக்கும் பெரும் கேடு மற்றும் தொற்று நோயாக மாறி சமூகத்தை சீர்குலைக்கும். ஆகவே, காய்ச்சல் உணரப்படும் நபர்கள் யாராக இருந்தாலும் மருத்துவமனை சென்று மருத்துவர் தரும் அறிவுரைகளையும் அவர் தரும் மருத்துவத்தையும் ஏற்று நன்மை பயத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது உயிரிழுப்புகளும் ஏற்படாது காத்துக் கொள்ளலாம்.
ப்ளூ காய்ச்சல் யாரை அதிகம் பாதிக்கிறது
65 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 5 வயதுகுட்ப்பட்ட குழந்தைகள் குறிப்பாக 2 வயது குழந்தைகள் மற்றும் கர்பிணிகள், நீரிழிவு நோய், இதய நோய், சிறுநீரக நோய், நுரையீரல் நோய்கள், புற்று நோய்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
பெரும்பாலும் அறிகுறிகளின் அடிப்படையிலேயே மருத்துவர்களால் ப்ளூ காய்ச்சல் என்பதை கண்டறிய முடியும். சிலருக்கு சோதனைகள் மூலமே கண்டறிய முடியும் நிலையும் காணப்படும்.
எப்படி தற்காத்து கொள்வது:
கைகளை சுத்தமாக சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவ வேண்டும். இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து விலகி இருத்தல் மூலமும் இந்த ப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசியை ஆண்டுக்கு ஓரு முறை செலுத்தி கொள்வது நன்மை தரும்.
காய்ச்சல் வந்தால் என்ன செய்லாம்:
ப்ளூ காய்ச்சல் இருப்பதாக அறிந்தால் வீ்ட்டிலேயே தனியாக ஓய்வு எடுத்தல் அவசியம். நிறைய திரவ உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சல் மற்றும் வலிகளை போக்க பாராசிட்டமால் மாத்திரைகளை மருத்துவர் அறிவுரையுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், ஆன்டிபையாடிக் மாத்திரைகள் இந்த காய்ச்சலுக்கு எடுபடுவதில்லை.
இந்த காய்ச்சல் வந்தவர்களுக்கு 4 அல்லது 5 நாட்கள் கழித்து உடல் நலம் பெறுகிறது. இருப்பினும் ஏதேனும் உடலில் மாற்றங்கள் இருந்தால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவரை அனுகுவது நல்லது.
கர்பிணிகளுக்கு என்ன பாதிப்பு?
கர்ப்பிணி பெண்களுக்கு இந்த காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி தடுப்பூசி செலுத்தி கொள்வது கர்ப்பிணிக்கும் உள்ளிருக்கும் சிசுவிற்கும் நன்மையாக இருக்கும்.
தடுப்பூசி போட தகுதியானவர்கள்:
6 மாத குழந்தை முதல் அனைவரும் ஓவ்வொரு ஆண்டும் இந்த தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதிலும் அக்டோபர் மாததிற்கு முன்ரே தடுப்பூசி செலுத்திக் கொள்வது நல்லது. அதாவது குளிர்காலம் தொடங்குவதற்கு முன் தடுப்பூசி போட்டுக் கொள்வது சிறப்பு.
மேலும், சர்க்கரை நோயாளிகள், நீரழிவு நோயாளிகள் மற்றும் மற்ற நோயாளிகள் உங்கள் மருத்துவரை அணுகி அவர்கள் கொடுக்கும் அறிவுரைப்படி செலுத்தி கொள்ளலாம். ப்ளூ தடுப்பூசியை கொரோனா தடுப்பூசியுடன் சேர்த்து எடுத்துக் கொள்லாம்.
இது போன்ற தகவல்களையும் ஆன்மீகம், ஜோதிடம், நகைச்சுவை, தமிழ் இலக்கியம், பொது அறிவு, உடல்நலம், செய்திகள் என அனைத்து வகையான தகவல்களையும் அறிந்து கொள்ள தலதமிழ் இணையதளத்தை அணுகுங்கள்.