தைராய்டு பாதிப்பிலிருந்து எப்படி பாதுகாத்து கொள்வது

0
6

தைராய்டு பாதிப்பிலிருந்து எப்படி பாதுகாத்து கொள்வது என்பதை இப்பதிவின் மூலம் அறியலாம். தைராய்டு தற்போது வயது வித்தியாசம் இன்றி அனைவருக்கும் ஏற்படும் நோயாக இருக்கின்றது. நாம் அன்றாடம் எடுத்து கொள்ளும் உணவு மூலம் பல மாற்றங்கள் செய்வதால் பல பிரச்சனைகள் எழுகின்றது அதில் ஓன்று தைராய்டு பிரச்சனை.

நம் உடலுக்கு தேவையான ஆற்றலையும் ஹார்மோன்களையும் வழங்குவதில் தைராடு சுப்பியின் பிரதானமான வேலையாகும் மேலும், உடலில் உள்ள வெப்ப நிலையை சீராக வைக்கவும் உடலுக்கு தேவையான வளர்ச்சிக்கு உதவுதம் என இதன் பயன் நீண்டு கொண்டே செல்கின்றது.

தைராய்டு என்றால் என்ன: 

தைராய்டு என்பது நம் கழுத்து பகுதியில் ஓரு பட்டாம்பூச்சி வடிவத்தில் காணப்படும் சுப்பியாகும். இவை தன் பணியை சரியாக செய்தால் எவ்வித பிரச்சனைகளும் வருவதில்லை. மனிதனின் மூளை, இதயம், தசைகள் நல்ல முறையில் இயங்குவதற்கு இவை தரும் ஹார்மோன்களை சுரக்கின்றது.

இதையும் கவனியுங்கள்: இன்ப்ளூயென்ஸா (ப்ளூ) காய்ச்சல் பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி?

தைராய்டு பாதிப்பிலிருந்து எப்படி பாதுகாத்து கொள்வது

உடலினை சராசரியாக அதாவது சீரான முறையில் வெப்ப நிலையை பாதுகாக்கவும் இது உதவுகின்றது. இந்த தைராய்டு சுப்பி அதிகமாகவோ அல்லது குறைத்தோ சுரந்தால் தைராய்டு சார்ந்த பிரச்சனைகள் உண்டாகின்றது என்று அர்த்தம். தைராட்டில் பிரச்சனை ஏற்பட்டால் அது உடல் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும்.

தைராய்டு பிரச்சனை இருவகை:

தைராய்டு பிரச்சனைகள் ஆண்களை காட்டிலும் பெண்களையே அதிகம் பாதிக்கின்றதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தைராய்டு மிகக் குறைவாக சுரப்பதால் ஏற்படும் பிரச்னையை ஹைப்போதைராய்டிஸம் (Hypothyroidism) என்றும் தைராய்டு அளவுக்கு அதிகமாகச் சுரப்பதால் ஏற்படும் பிரச்னையை ஹைப்பர் தைராய்டிஸம் (Hyperthyroidism) என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அறிகுறிகள்: 

தைராய்டு சுரப்பி அதிகமாக சுரப்பதனால் உடல் சோர்வு ஏற்படும். பின் உடல் எடை குறைந்து காணப்படுவர். செயல்களில் மந்தமான சூழல் நிலவி மிகவும் சாதாரணமான குளிரைக் கூட தாங்க முடியாத நிலை ஏற்பட்டு பல அசோகரியங்களை ஏற்படுத்தும்.

அதே வேலையில் தைராய்டு சுரப்பி குறைவாக சுரப்பதனால் எரிச்சல், குழப்பம், பதற்றம், இதயத்துடிப்பில் மாற்றம், உடல் எடை கூடுதல் என பிரச்சனைகளை ஏற்படுத்தும். முக்கியமாக பெண்களுக்கு முறையற்ற  மாதவிடாய் பிரச்சனைகள், கருவுறதலில் சிக்கல், கருச்சிதைவு என பல பிரச்சனைகளை உண்டாக்கும்.

தைராய்டு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்:

உணவில் அயோடின் சத்துக்குறைபாடு, மன அழுத்தம், மரபியல் குறைபாடுகள் போன்றவை தைராய்டு நோய்க்கு முக்கிய காரணமாகின்றன. உணவுப் பொருட்களில் கலந்திருக்கும் அயோடின் சத்து அதிகரித்தால் எந்தவித பாதிப்பும் வராது. எனவே, தைராய்டு நோயாளிகள் நோய்க்கான சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரை எடுத்துக்கொள்வதோடு முறையான உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டியதும் அவசியமாகிறது.

தைராய்டிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்:

நம் உடலில் தைராய்டு சுரப்பி சீராக வேலை செய்வதற்கு கொழுப்பு நீக்கப்பட்ட பாலை தினமும் ஓரு கப் அளவிற்கு எடுத்து கொள்வது அவசியமாகிறது. இதில் அயோடின் சத்து கிடைப்பதால் இதை பருகுவது முக்கியம் அது போலவே தனிசரி உணவில் குறைந்த அளவு கொழுப்பு கொண்ட தயிரை சேர்த்து கொளவதும் அவசியம்.

உடலில் துத்தநாகச் சத்து குறைபாட்டால் ஹைப்பர் தைராய்டிஸம் ஏற்படுகிறது. கோழிக்கறி மற்றும் மாட்டிறைச்சியில் அதிகஅளவு துத்தநாகச் சத்து உள்ளது. இதுதவிர சமையலுக்கு சாதாரண உப்பைப் பயன்படுத்துவதைவிட அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்த வேண்டும். மேலும், முட்டை, தானியங்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்ட உணவை சாப்பிடுவது அவசியமாகிறது.

இன்றைய நாளில் கண்களாலும் வாசத்தாலும் கவரும் வகையில் செய்யப்படும் துரித உணவு வகைகளை தவிர்த்தல் நல்லது. அதுபோல, பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிக அளவு சோடியம் சேர்க்கப்பட்டிருப்பதால் உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் ஏற்பட காரணமாவதுடன், அயோடின் அளவையும் குறைத்துவிடும். அதனால், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்தல் வேண்டும்.

பேக்கரியில் தயாரிக்கப்படும் பிரெட் போன்றவற்றையும் தவிர்த்தல் சோளம், ஆளி விதை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, முட்டை கோஸ், காலிப்ளவர் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

இப்படி நம் அன்றாட உணவு வகைகளை பின்பற்றுவதன் மூலம் தைரயாடு பிரச்சனைகள் நம்மை அணுகாமல் பாதுகாத்து கொள்ளலாம்.

இது போன்ற பல முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள தலதமிழ் இணையதளத்தை பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here