கொரோனா தொற்றிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி?

0
35

உருமாறி வரும் கொரோனா தொற்றிருந்து உலக நாடுகள் அனைத்தும் விழி பிதிங்கி உள்ளது. ஏனெனில் கொரோனா நோயின் தாக்கம் மக்களை அச்சம் அடைய செய்கிறது. கொரோனாத் தொற்று உள்ளவர்களிட்மிருந்து மிக எளிமையாக அவர்கள் தும்பும் போதும் பேசும் போதும் மற்றவர்களிடம் பரவுகிறது. அதுமட்டும் அல்லது பல உயிர்களை காவு வாங்குகிறுது. எனவே நாமும் பல முன்னேற்பாடுகளுடன் பாதுகாப்புடனும் இருப்பது நல்லது என உலக நாடுகள் தெரிவித்துள்ளது.

கோவிட் 19 என்று சொல்லக்கூடிய கொரோனா வைரசானது முதலில் 2019 டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள வுகான் நகரில் கண்டறியப்பட்டது. பிறகு உலக நாடுகள் அனைத்திலும் பரவியது என்பது அனைத்து நாடுகளும் அறிந்த ஓன்றே.

கொரோனா தொற்றின் அறிகுறிகள்

 • கடுமையான காய்ச்சல், சளி, மூக்கு ஓழுகுதல், மூக்கடைப்பு, இரும்பல்.
 • தலைவலி, பசியின்மை, வயிற்றுப் போக்கு, கண் எரிச்சல், வறண்ட நாக்கு.
 • மூச்சு திணறல், மிகவும் சோர்வாக காணப்படுதல், சுவை வாசணையை இழத்தல்.
 • தொண்டையில் அரிப்பு மற்றும் புண் ஏற்படுதல், உமிழ் நீர் குறைதல்.

இது போன்ற அறிகுறிகள் மனித உடலில் நீண்ட நாட்களாக காணப்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சரியான முறையில் சிகிச்சை பெற்று விரைவில் குணமடையலாம். இது போன்ற தொற்று நோய்கள் ஏற்படும் போது மனம் தளரா்ச்சியுராமல் மன தைரியத்துடன் இருப்பது மருத்துவ சிகிச்சையைத் தாண்டிய ஊக்கமாக இருக்கும் .

கொரோனா நோயின் பரவல்

மக்கள் தும்மும் போதும் இரும்பும் போதும் வெளிவரும் திரவத்துளிகள் காற்றில் கலந்து மேற்பரப்பில் விழுந்து அதன் மூலம் கொரோனா நோய் பரவுவதாக உலக சுகாதர நிறுவனம் தெரிவிக்கிறது. ஆகையால் தான் சோப்பு அல்லது சேனிடைசர் போட்டு கை கழுவுதல் முக்கிய கடமையாக கருதப்படுகிறது.

தொற்றும் ஊரடங்கும்

மக்கள் நெருக்கமாக கூடுகின்ற இடங்களிலும் காற்றோட்டம் இல்லாத இடங்களிலும் மிக எளிதாக தொற்று பாதிக்கபட்டவர்களிடத்திலிருந்து விரைவாக பரவுகிறது. அதனை கட்டுப்படுத்தவே ஊரடங்கு (லாக்டவுன்) விதிக்கப்பட்டது. ஊரடங்கு என்பதே யாரும் சரியாக அறியாத ஓன்றாக இருந்தது.

இந்நோயினால் ஊரடங்கு என்றால் என்ன? என்பதையும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெரிந்து கொண்டனர். பள்ளிகள் முதல் கடைகள், பேருந்து, பூங்காக்கள், பொழுதுபோக்கு இடங்கள் என அனைத்தும் பல மாதங்கள்  முடங்கியதை யாராலும் மறக்க முடியாது. மக்கள் அவரவர் வீடுகளில் இருந்து கொண்டு முழுஊரடங்கிற்கு முழு ஓத்துழைப்பு நல்கினர்.

ஆதலால் தான் கொரோனா தொற்றானது கட்டுக்குள் வந்தது. இருந்தும் புதிய வடிவம் எடுத்து உருமாற்றம் பெற்று வீரியத்துடன் பல நாடுகளை அச்சுறுத்தி வருவது குறிப்பிட தக்கது.

ஊரடங்கு தளர்வுகள்

முழுஊரடங்கு முடிந்து சற்று தளர்வுகள் கொடுக்கப்பட்ட போது பெரிய வகையான வாகனங்கள் இயங்க மறுக்கப்பட்டது. அப்போது அனைவருக்கும் இரு சக்கர வாகனங்களே பரிந்துரைக்கப்பட்டது.

முழுஊரடங்கின் போது உள்ளுர்வாசிகள் பயணம் மேற்கொள்ள இரு சக்கர வாகனங்களையே அதிகமாக பயன்படுத்தினர். அதன் விளைவாக இரு சக்கர வாகனங்களின் விற்பனை அதிகமாகியது என்று ஆய்வின் மூலம் அறியலாம். இரு சக்கர வாகனங்களி்ன் எண்ணிக்கை என்றும் இல்லாத அளவிற்கு அதிகரித்தது.

ஊரடங்கின் போது அவர‍வர் வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் கடைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. காய்கறிகளும் மளிகைப் பொருட்களும் நடமாடும் கடைகள்  மூலமும் விற்க அனுமதிக்கப்பட்டது. அரசாங்கம் ரேஷன் கடைகள் மூலம் இலவச மளிகைப் பொருட்களையும் கொடுத்தது. அம்மா உணவகங்களில் மூன்று வேலையும் இலவசமாக உணவினை மக்களுக்கு வழங்கியது.

கொரோனா

கொரோனா தொற்று கண்டறியப்பட்டவுடன் கடைப்பிடிக்க வேண்டியவை

 • தொற்று உறுதியானவர்கள் தங்களை தாங்களே வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 • தனிமைப்படுத்தி கொள்ளும் அறையானது காற்றோட்டம் உள்ள இடமாக இருக்க வேண்டும்.
 • எளிமையாக ஜிரணம் ஆகும் உணவுகளையே உண்ணுதல் நல்லது.
 • நன்றாக காய்ச்சிய குடிநீரை ஆராவைத்தும் மிதமான சூட்டில் பருகுவதும் தொண்டைக்கு இதமாக இருக்கும்.
 • மருத்துவரின் அறிவுரை இல்லாமல் கைவைத்தியங்கள் செய்ய கூடாது.
 • ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வதுடன் சரியாக உடல் வெப்ப நிலையை ஆறு மணி நேரத்திற்கு மூன்று முறை மேற்கொள்ள வேண்டும். ஆக்ஸிஜன் அளவையும் அடிக்கடி பார்த்துக் கொள்ள வேண்டும்.

 • ஏழு நாட்கள் முடிந்து சரியானதும் மேலும் மூன்று நாட்கள் வீட்டிலேயே இருந்து தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 • வீட்டில் உள்ள அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து இருக்க வேண்டும்.
 • தொற்றுள்ளவர்களுடன் ஓருவர் இருக்க நேரிட்டால் அவர்கள் மிகவும் பாதுகாப்புடன் இருத்தல் வேண்டும்.
 • தொற்றுள்ளவருடன் இருந்தவர் ஏழு நாட்கள் கட்டாயம் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 • மருத்துவர் கூறும் அறிவுரைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.
 • மருத்துவர் கூறிய மருந்துகளை தவறாமல் எடுத்து கொள்ள வேண்டும்.
 • நிறைய சூப் அருந்துவதும், வேது பிடிப்பதும் நலம் பயக்கு.
 • இளநீர் போன்ற குளுர்ச்சியான இயற்கையான பானங்களை அருந்துவது நல்லது.
 • அவசியம் ஓய்வு எடுத்தல் நல்லது.
 • படுத்திருக்கும் போது மார்பு பகுதி தரையில் படுமாறு குப்புறப்படுத்தல் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும்.

இந்தியாவில் 2020 பிப்ரவரி மாதம் கண்டறியப்பட்டது. மேலும், பல நாடுகளிலும் கொரோனா வைரசானது ஆல்பா, பீட்டா, காமா, ஓமைக்ரான், டெல்டா, என பல பெயர்களில் உருமாறி பரிணாமத்துடனும் வீரீயத்துடனும் வந்துக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

இந்நோயானது மனிதனின் நுரையீரலை முதலில் தாக்கி சுவாசக் காற்றை பாதிக்கிறது. அதாவது, மூச்சுக் காற்று வாங்குவதில் சிரமம் ஏற்படுத்தி பின் உயிரை மாய்கிறது.

ஆகவே, நாம் க‍வனமுடனும் சிறப்பாகவும் ஓவ்வொருவரும் தன்னை பாதுகாப்புடன் நடத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு எப்படி இருக்க வேண்டும் என மத்திய அரசும், மாநில அரசும் நமக்கு பல வழிமுறைகளை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது?

 • தினமும் நாம் அன்றாடம் செல்லும் இடத்திற்கு முககவசம் அணிந்து செல்ல வேண்டும்.
 •  மூக்கையும் வாயையும் மூடியவாறு முககவசத்தை சரியாக அணிதல் வேண்டும்.
 • முககவசத்தை எடுத்து தாடைகளுக்கு கீழ் தள்ளி வைத்து பேசுவதும் உலவுவதும் தவறு.
 • ஐந்து வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கு முககவசம் (MASK) கட்டயம் இல்லை.
 • ஐந்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் முககவசம் அணிவது கட்டயம்.
 • சேனிடைசர் பயன்படுத்த வேண்டும், வீட்டை விட்டு வெளியில் சென்று வந்தால் முதலில் கைகளையும் கால்களையும் நன்றாக சோப்புப் போட்டு கழுவ வேண்டும்.
 • சமூக இடைவெளியை பின்பற்றுதல், குழுவாக கூடுவதை தவிர்த்தல், காற்றோட்டமான பகுதியில் இருத்தல் .
 • தும்பும் போதும் இரும்பும் போதும் கர்ச்சிப்பு பயன்படுத்த வேண்டும்.
 • தவறாமல் தடுப்பூசி செலுத்துதல் வேண்டும்.
 • முதல் தடுப்பூசி செலுத்தியவர்கள் இரண்டாம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
 • முதியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அரசாங்கம் அறிவுறுத்தினால் செலுத்திக் கொள்ளலாம்.
 • அரசு தெரிவிக்கும் நோய் தொற்று சார்ந்த அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
 • ஐ சி எம் ஆர் என சொல்லப்பட கூடிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் குறிப்பிடும் தகவல்களை உடனுக்குடன் தெரிந்து அதன்படி நடத்தல் வேண்டும். https://www.icmr.gov.in/

மூன்று வயதுக்குள் இருக்கும் குழந்தைகளையும் எழுவது வயதுக்கு மேற்பட்ட முதியவர்களையும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும்.

2019 ல் இந்நோய் கண்டறியப்பட்டிருந்தாலும் 2022 லும் தொடர்ந்து வருவது கவலை அளிப்பதாய் உள்ளது. இரண்டாம் அலை, மூன்றாம் அலை, நான்காம் அலை என உருமாறி வரும் கொரோனா நோயானது தொடர்ச்சியாக தொடர்ந்து வந்து கொண்டேதான் உள்ளது.

முககவசம் அணிய வேண்டிய இடங்கள்

 1. கோயில் திருவிழாக்கள்.
 2. திருமணம் சார்ந்த சுப நிகழ்ச்சிகள்.
 3. துக்கம் சார்ந்த சடங்குகள் நிகழும் இடங்கள்.
 4. முக்கியமாக மருத்துவமனைகளில் நோயாளியாக இருந்தாலும் நோயாளியை பார்க்க சென்றாலும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
 5. அதை போல மருந்தகங்களிலும் மருந்துகள் வாங்குபவரும் மருந்துகள் விற்பனை செய்பவரும் முக கவசம் அணிய வேண்டும்.
 6. பேருந்து பயணத்தின் போதும் பொதுவாக பயணம் மேற்கொள்ளும் போது முக கவசம் அணிதல் நல்லது.
 7. ஷாப்பிங் மால் போன்ற இடங்களிலும் திரையரங்குகளிலும் முககவசம் கட்டாயம்.

கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் பச்சத்தி்ல் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். கொரோனாவின் தாக்கம் குறைந்து காணப்படும் போது அனைத்து வகையான பயணங்களையும் பாதுகாப்பாக மேற்கொள்ளலாம். அரசாங்கம் குறிப்படும் விதிமுறைகளை பின்பற்றி அதற்கேற்ப பயணங்களை வகுத்து கொள்ளலாம்.

தடுப்பூசியின் நன்மைகள்

 • கொரோனா வைரஸிலிருந்து நம்மை பாதுகாப்பது கொரோனா தடுப்பூசிகள்.
 • தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை மனித உடலில் ஏற்படுத்துகிறது.
 • தடுப்பூசிகள் கொரோனா தொற்று பாதிக்கப்படுவதிலிருந்தும்,  பரப்புபவர்களிடமிருந்தும் மக்களை பாதுகாக்கின்றது.
 • கடுமையான நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பதுடன், தடுப்பூசி வெகுவாக இறப்பினை தடுக்கின்றது என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.
 • கோவிட் 19 தொற்றிலிருந்து மீண்டவர்கள் 14 நாட்கள் கழித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
 • பல உடல்நல பிரச்சனை உள்ளவர்களும் அனைத்து தடுப்பூசிகளையும்  செலுத்திக் கொள்ளலாம்.
 • தடுப்பூசி செலுத்தியப் பின்னரும் கொரோனா தொற்று ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.
 • முதல் தடுப்பூசிக்கும் இரண்டாவது தடுப்பூசிக்கும் குறைந்தது 84 நாட்கள் இடைவெளி இருப்பது நல்லது.
 • பன்னிரண்டு வயது குழந்தைகள் முதல் தடு்ப்பூசி போட்டு கொள்ளலாம்.

மேலும், இந்நோயிலிருந்து தப்பிக்க தடுப்பூசி மிக முக்கியமானதாகும். அனைவரும் சிரமம் பாராமல், அலச்சியம் செய்யாமல், ஓவ்வொருவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இனி நாளும் முககவசம் அணிவது கட்டாயம் பின்பற்றுவது. அனைவருக்கும், நமக்கும் நம்மை சூழ்ந்துள்ளவருக்கும் நன்மை அளிக்கும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறு பின்பற்றினால் நம்மை நாம் பாதுகாத்து கொள்ளலாம்.

தமிழகத்தின் தற்போதைய தினசரி கொரோனா தொற்று நிலவரத்தை அவ்வப்போது தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. மேலும் விழிப்புணர்வு பிரச்சாரமும் அரசால் தினமும் செய்யப்படுகிறது. பொதுமக்கள் அரசின் வழிகாட்டுதலை பின்பற்றினால் அனைவரும் நலமுடன் வாழலாம்.

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் தாக்கமும், கொரோனா வைரஸின் பரவலும், அதை சார்ந்த உயிரிழப்புகளும் குறைந்ததன் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் அனைத்து வகையான ஊரடங்களும் விளக்கிக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிட தக்கது.

கோயில் சார்ந்த விழாக்கள் முதல் திருமணம் போன்ற அனைத்து வகையான சடங்குகளையும் செய்ய எந்த ஓரு கட்டுப்பாடும் இல்லை. விழாக்கள் அனைத்தையும் நடத்தலாம் எனவும் அரசு கூறியுள்ளது. எனினும் நாம் எப்போதும் விழிப்புணர்வுடன் இருப்பது என்றும் நமக்கு நன்மையையே நல்கும் என்பதில் ஐயமில்லை.

அரசின் அதிகாரப் பூர்வ வலைதளங்கள்

தமிழக அரசின் அதிகாரப் பூர்வ வலைதளம் – https://stopcorona.tn.gov.in/ta/

தமிழக அரசின் அதிகாரப் பூர்வ சமூக வலைதளம் –  ‎@NHM_TN

தமிழ் நாடு அரசின் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை எண்கள்

 • 044 – 29510400, 044 – 29510500
 • 044 – 24300300, 044 – 46274446
 • 9444340496, 8754448477

இந்திய அரசின் அதிகார பூர்வ வலைதளங்கள் – https://www.icmr.gov.in/ & https://www.mohfw.gov.in/

இந்திய அரசின் அதிகார பூர்வ சமூக வலைதளங்கள் – @ICMRDELHI

மத்திய அரசின் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை எண் – 1075

கொரோனா சார்ந்த அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்

இந்த வைரஸ் ஏன் கொரோனா என்று அழைக்கப்படுகிறது?

கரோனா என்ற வார்த்தைக்கு கிரீடம் என்று பொருள் மற்றும் கொரோனா வைரஸ்கள் அவற்றில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஸ்பைக் புரோட்டீன்களிலிருந்து பெறும் தோற்றத்தைக் குறிக்கிறது.

கொரோனா என்ற வார்த்தை எந்த மொழியை தழுவி வந்தது?

கொரோனா என்ற வார்த்தை இலத்தின் மொழியை தழுவியது.

கோவிட் கொரோனா அறிகுறிகள் எப்படி இருக்கும்? 

காய்ச்சல், சளி, இரும்பல், கண் எரிச்சல், தலைவலி, கடுமையான சோர்வு, பசியின்மை, வாந்தி, வாசணை அறிய முடியாமை, மூச்சி விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் மூலம் அறியலாம்.

கோவிட் 19 – கொரோனா அறிகுறி எத்தனை நாட்களில் தெரியும்?

5 நாட்களிலிருந்து 14 நாட்கள் கூட ஆகலாம் கொரோனா அறிகுறி தெரிவதற்கு.

கொரோனா குணமடைய எத்தனை நாட்கள் ஆகும்? 

அவரவர் உடல்நிலையை பொறுத்தது கரோனாவில் சிலர் விரைவில் குணமாகி விடுவார்கள். சிலருக்கு ஒரு மாதம் ஆகும், சிலருக்கு மூன்று மாதங்கள் ஆகும், சிலர் ஒரு வாரத்தில் குணமடைந்து விடுவார்கள். கொரோனாவின் வீரியமும் இதில் பங்கு வகிக்கும்.

கரோனா வைரஸ் மனித உடலில் எத்தனை நாள் இருக்கும்?

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் 90 நாட்கள் வரை இருக்கும்.

கொரோனா இருமல் எப்படி இருக்கும்?

வறண்ட இரும்பலாக இருக்கும்.

கொரோனா தொண்டை வலி எப்படி இருக்கும்?

கடுமையான சளி போன்று கடுமையான தொண்டை வலி மற்றும் தொண்டையில் புண் ஏற்படும்.

கொரோனா டெஸ்ட் செய்வது எப்படி?

நோய் தொற்று பாதிப்பை கண்டறிவதற்கு பிசிஆர் (PCR) பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

அதிகார பூர்வ கொரோனா சான்றிதழ் பெறுவது எப்படி?

கோவின் இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம், ஆரோக்கிய சேது அல்லது உமாங்க் செயலிகளின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

கொரோனா பாதிப்புக்கு பிறகு காற்றில் மாசு எந்த அளவு குறைந்துள்ளது?

கொரோனா ஊரடங்கின் காரணமாக உலகின் அனைத்து நாடுகளிலும் கார்பன் மோனா ஆக்சைடு 50 சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here