பாகுபலி பிரபாஸ் படத்தில் முக்கிய வேடத்தில் ஹிரித்திக் ரோஷன்

0
7

பிரபாஸ்: ஆதிபுருஷ்’ படத்தை நடித்து முடித்துவிட்ட பிரபாஸ் அப்படத்தில் ராமராக நடித்துள்ளார். சீதை வேடத்தில் கீர்த்தி சனோன் நடித்துள்ளார். இதையடுத்து பிரசாந்த் நீல் இயக்கத்தில், ‘சலார்’ படத்திலும் நாக் அஸ்வின் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்திலும் பிரபாஸ் நடித்து வருகிறார். இதையடுத்து மைத்ரி மூவிஸ் தயாரிக்கும் படத்தில் பிரபாஸ் நடிக்க உள்ளார். இந்த படத்தை ஷாருக்கான் நடித்த ‘பதான்’ இந்திப் படத்தை இயக்கிய இயக்குனர் சித்தார்த்த ஆனந்த் இயக்க உள்ளார்.

பதான் படத்தை முடித்ததும் சித்தார்த் ஆனந்த் ஹிரித்திக் ரோஷன் நடிக்கும் ‘ஃபைட்டர்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் பிரபாஸ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இதில் முக்கிய வேடத்தில் ஹிரித்திக் ரோஷன் நடிக்க உள்ளார்.

prabhas and hrithik roshan to work together in siddharth anand's next film

இதற்கு முன்பு சித்தார்த் ஆனந்த் இயக்கிய ‘வார்’ படத்திலும் ஹிரித்திக் ரோஷன் நடித்திருந்தார். அவருடன் நல்ல நட்பில் இருப்பதால், பிரபாஸ் படத்தில் முக்கிய வேடத்தில் ஹிரித்திக்கை நடிக்க வைக்க இருக்கிறார் இயக்குனர் சித்தார்த் ஆனந்த்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here