ஐபிஎல் 2022 பஞ்சாப்பை எளிதில் வென்ற ஹைதராபாத்

0
3

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி வெற்றி; ஹைதராபாத் அணியில் உம்ரான் மாலிக் சிறப்பாக பந்து வீச, மார்க்ரம் மற்றும் பூரன் அதிரடியாக விளையாடி வெற்றியை தேடி தந்தனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஐபிஎல் போட்டிகளில் இன்றைய 28 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் அணியும் களமிறங்கின. இவ்விரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி புள்ளிப் பட்டியலில் முன்னேறும். எனவே இரு அணிகளும் போட்டியை வெல்ல முனைப்புடன் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

ஹைதராபாத் பேட்டிங்

152 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியில், தொடக்க ஆட்டகாரராக களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன் 3 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த அபிஷேக் வர்மா மற்றும் ராகுல் திரிபாதி அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். அபிஷேக் 31 ரன்களிலும், திரிபாதி 34 ரன்களிலும் ராகுல் சாஹர் பந்தில் ஷாரூக்கானிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினர். அடுத்து ஜோடி சேர்ந்த மார்க்ரம் மற்றும் பூரண் பஞ்சாப் பந்து வீச்சை அடித்து நொறுக்கி அணிக்கு வெற்றியை தேடித் தந்தனர். மார்க்ரம் 27 பந்துகளில் 41 ரன்கள் எடுக்க, பூரன் 30 பந்தில் 35 ரன்கள் எடுத்தார்.

ஹைதராபாத் அணி 18.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்து பஞ்சாபை வீழ்த்தியது. பஞ்சாப் தரப்பில் ராகுல் சாஹர் 2 விக்கெட்களும், ரபாடா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here