நடிப்பதை விட்டு விடலாம் என்று கூட நினைத்தேன் என அமலா பால் உருக்கமாக கூறியுள்ளார்.
தமிழ் திரைப்படங்களில் முன்னனி நடிகர்களின் கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா பால். மைனா படங்த்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமாகி பல ஹீட் படங்களில் நடித்து பெயர் பெற்றவர்.
தமிழ் படங்களில் மட்டும் அல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 4 ஆண்டு காலமாக படங்களில் ஏதும் நடிக்காமல் இருந்தார். அதற்கு காரணம் தான் சிறு வயதிலிருந்தே வேலை செய்து வருகிறேன். எனக்கு மிகவும் பிடித்த நபராக இருந்தவர் என் தந்தை அவர் 2020 ஆம் ஆண்டு இறந்தார். அது எனக்கு மிக பெரும் துயரமாக இருந்தது. அப்போது நடிப்பைதை விட்டு விடலாம் என்று கூட நினைத்தது உண்டு. அப்போது கொரோனா லாக்டவுன் வேறு என உருக்கமாக கூறினார்.

2016 ஆம் ஆண்டு அமலா பாலும் டைரைக்கடர் ஆர்.கே. விஜயை காதல் திருமணம் செய்து கொண்டவர். பல கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமலாபால் நடித்து விக்டிம் அந்தொலஜி தொடரில்”கன்ஃபஷன்” என்ற செக்மென்ட்டில் நடித்துள்ளார். இது சோனி லைவ்வில் வெளிவந்துள்ளது. சமீபத்தில் நடிகை அமலாபால் தன்னை பற்றி கூறிய விஷயம் ஒன்று சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
தற்போது அமலாபால் நடிப்பில் வெளிவந்துள்ள விக்டிம் ஆன்தாலஜி தொடர் மூலம் பலரை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். நடிகர்கள் பிரசன்னா, அமலாபால், கிரிஷ் நடித்திருந்த இந்த ஆன்தாலஜி தொடரில் அமலாபால் நடித்த கன்ஃபஷன் பாகத்தை இயக்கியுள்ளார் வெங்கட் பிரபு.
இப்படத்தில் நடித்ததின் மூலம் இப்பொழுது மீண்டும் பிறந்தது போல் நான் உணர்கிறேன், என்று அமலா பால் உருக்கமாக கூறியுள்ளார்.