நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன் என்று சாய் பல்லவி டிவிட்

0
7

நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன் என்று நடிகை சாய் பல்லவி டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். 

நடிகை சாய் பல்லவி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பிசியான நடிகையாக வளர்ந்துள்ளார். தான் நடித்த முதல் படத்திலேயே இத்தனை மொழிகளில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனார். தன் முதல் படமான மலையாள படமான ப்ரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது தனி கேரக்டர் கொடுத்தாலும் சிறப்பான தன் நடிப்பு ஆற்றலால் தன்க்கென இடத்தை பிடித்து விட்டார்.

தமிழ் திரைப்படங்களிலும் நல்ல நடிப்பு திறமையை வெளிப்படுத்தி முன்னணி நடிகராக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நிறைந்து உள்ளார் என்றால் மிகையாகாது. தற்போது இவர் விராட் பர்வம் என்ற படத்தில் நக்சலைட்டாக நடித்துள்ளார். இவர் கதாசிரியர்களிடம் கதையை கேட்டு நல்ல படமாகவும் தனக்கு ஏற்ற படமாகவும் இருக்கும் படங்களுக்கு மட்டுமே அவர் பச்சை கொடி காட்டி நடிப்பார்.

நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன் என்று சாய் பல்லவி டிவிட்

சில தினங்களுக்கு முன் நடந்த பிலிம்பேர் விருது நடைபெற்றது அதில் இவருக்கு இரண்டு விருதுகள் கிடைத்து குறிப்பிடத்தக்கது. இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கத்தில் வெளியான படம் “ஷியாம் சிங்க ராய்”.மறுபிறவியை மையமாக கொண்டு உருவான இப்படத்தில், நானி இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற நயன்தாரா விக்னேஷ் சட்டம் என்ன சொல்கிறது

சாய்பல்லவி, கிரித்தி ஷெட்டி, ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவான இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், 67வது தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழா சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான ஷ்யாம் சிங்க ராய் படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விமர்சகர் விருதும், லவ் ஸ்டோரி படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதும் சாய் பல்லவிக்கு கிடைத்தது. இதனை பெற்றுக் கொண்ட சாய் பல்லவி இதுகுறித்து சமூக வலைத்தளமான டிவிட்டரில் பதிவு ஓன்றை போட்டுள்ளார்.

அதில், இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஒரே வருடத்தின் இரண்டு படங்களுக்கும் விருது கிடைத்தது பாராட்டப்பட வேண்டும். அபரிமிதமான அன்பிற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன் மற்றும் இதுபோன்ற அழகான பாத்திரங்கள் எனக்கு கிடைக்க நான் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன். படக்குழு மற்றும் அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here