அம்மாவின் 65 கிராம் தங்கத்தை வைத்து தொழில் தொடங்கினேன்-லலிதா ஜூவல்லரி கிரண்குமார்

0
3

அம்மாவின் 65 கிராம் தங்கத்தை வைத்து தொழில் தொடங்கினேன்-லலிதா ஜூவல்லரி கிரண்குமார்.

பல டிவி சேனல்களில் இவரது விளம்பரம் இல்லாமல் இருக்காது. கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்த ஏன் இப்படி வேஸ்ட் பண்றீங்க எல்லா ஜூவல்லரிக்கும் போய் செக் பன்னி பார்த்து நகைய வாங்குங்க பணம் என்ன கிழையா கிடக்குது என தன் லலிதா ஜூவல்லரி கடையை பற்றி கிரண்குமார் பேசும் வசனங்களை நாம் கேட்டிருப்போம். இன்று பல கிளைகளை கொண்டு இயங்கி வருகிறது லிலிதா நகை கடைகள். இவரின் ஆரம்ப கால வாழ்கை பற்றியும் இவரின் முன்னேற்றத்தை பற்றியும் இப்பதிவில் அறிந்து கொள்ளலாம்.

கிரண் குமாரின் ஆரம்ப கால வாழ்க்கை:

லலிதா ஜூவல்லரி இன்று இந்தியா முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் தனது கிளைகளை தொடங்கி தங்கம், வெள்ளி, பிளாட்டினம், வைரம் என அனைத்திலும் சிறப்பான வியாபாரத்தை செய்து வருகிறது. தமிழ் நாட்டில் அதிக கிளைகளை கொண்டுள்ளது லலிதா. வாடிக்கையாளர்களின் மதிப்பு, அன்பு, ஆதவரவு, நம்பிக்கை, நாணயம், கைராசி என அனைத்தையும் பெற்று இயங்குகிறது என்றால் மிகையாகாது.

இதையும் கவனியுங்கள்: தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்

இந்த கிளைகளில் உள்ள வியாபாரத்தின் மூலம் வருடத்திற்கு பத்தாயிரம் கோடிக்கு மேல் ஈட்டி வருகிறது. இந்த அளவிற்கு வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக பார்கக்ப்படுவது வியாபார தந்திர யுத்தி கிரண் குமாரின் அவர்களின் வியாபார உத்தி என்பதில் ஐயமில்லை.

அம்மாவின் 65 கிராம் தங்கத்தை வைத்து தொழில் தொடங்கினேன்-லலிதா ஜூவல்லரி கிரண்குமார்

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். மார்வாடியான இவரது தந்தை மூல்சந்த் ஜெயின் வட்டிக்கடை நடத்த ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு குடிபெயர்ந்தார். அங்குதான் கிரன்குமார் ரெட்டி பிறந்தார் அங்கிருந்து அருகில் உள்ள மிகப்பெரிய மெட்ரோபாலிட்டன் சிட்டியான சென்னையில் தனது வியாபாரத்தை தொடங்கினார்.

பின்னர், இலங்கையைச் சேர்ந்தவர்கள் நடத்தி வந்த லலிதா ஜூவல்லரி கையகப்படுத்தி சென்னையிலேயே குடியேறினார். கிரண்குமார் ஜெயின் வசம் வந்த லலிதா ஜுவல்லரி ஆந்திராவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்று அதிவேகமாக வளர்ந்தது குறிப்பிடத்தக்கது.

அம்மாவின் நகைகளை முதலீடாக:

தன் குடும்பம் நலிவுற்று இருந்த காலத்தில் மிகவும் அவதியுற்றனர். அப்போது தன் அம்மா வைத்திருந்த 65 கிராம் நகைகளை கேட்டு வாங்கி சென்னைக்கு சென்று அதனை உருக்கி அதனை விற்றுள்ளார் அதில் கிடைத்த லாபத்தை பெற்று அதனையே தன் தொழிலாக செய்து வந்துள்ளார்.

இப்படியே ஓரு சில காலம் சென்றது. ஓரு சமயம் தான் வியாபாரம் செய்யும் கடைக்கு கடன் கொடுத்தவர்கள் வந்திருந்தனர். அந்த நகை கடை நஷ்டத்தில் இயங்கியதாகவும் அதனால் தான் வாங்கிய கடனை திருப்பி தர முடியவில்லை என்றும் கடன் வாங்கிய கடை முதலாளி தெரிவித்திருந்தார்.

அந்த சமயத்தில் கிரண்குமார் அந்த கடையின் மீது இருக்கும் அனைத்து கடனையும் மீட்டு கொடுப்பேன் என உத்தரவாதம் அளித்தார். இந்நிலையில், கடை முதலாளி கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால் உன்னை காவல் துறை கைது செய்து சிறையில் தள்ளும் எனவும் தெரிவித்திருந்தார். இத்தனையையும் தாண்டி நான் கடனை கட்டுகுறேன் என்றார் கிரண்குமார். அந்த கடையின் உரிமை அனைத்தும் மாற்றி கிரண்குமார் கைகளுக்கு வந்தது.

அந்த கடையின் மூலம் வியாபாரம் செய்து கடனை அடைத்து அந்த கடையை நிரந்தரமாக தன் பெயரில் மாற்றி கொண்டார். இப்படி நம்பிக்கையுடனும் பெரும் முயற்சி தன்னிம்பிக்கையுடன் செயல்பட்டதால் இன்று தமிழகத்தில் ஓரு முன்னணி நகை கடையாக வலம் வந்துள்ளார். இப்படி ஓரு வளர்ச்சிக்கு பின்னால் இவ்வளவு பெரிய வரலாறு உள்ளது.

விளம்பரங்களில் கிரண் குமார்:

என்னுடைய கடையின் விளம்பரத்திற்கு நான் வேற ஏதாவது நடிகையை கொண்டு வந்து அவர்களை வைத்துக் கொண்டு நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை ஏன் வேஸ்ட் செய்கிறீர்கள் சம்பாதிக்கும் செலவு செய்யுங்கள் என்று அவர்களை வைத்து சொல்வது. அது எடுபடாத ஒரு விஷயம் அதே விஷயத்தை நானே வந்து நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வேஸ்ட் செய்யாதீர்கள்.

என நான் சொல்லும்போது அது மக்களிடையே நேரடியாக செல்கின்றது அது மட்டும் இல்லாமல் நான் விளம்பரத்தில் சொன்னதெல்லாம் பொய் இல்லை நான் உண்மையாக என் கடையில் என்ன நடக்கிறதோ எந்த நிலவரத்தில் உள்ளதோ அதை மட்டும் தான் சொல்கிறேன். ஒரு பொருளை வைத்து மட்டும் நூறு ரூபாய் சம்பாதிக்க நினைப்பவன் நான் இல்லை 100 பொருளை விற்று 100 ரூபாய் சம்பாதித்துக் கொள்ளலாம் என கிரன்குமார் தெளிவான விளக்கம் கொடுத்திருந்தார்.

மேலும், பல கிளைகளில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி அவரை சின்னாபின்னமாக்கியது எதற்கும் தயங்காமல் தன்னம்பிக்கையுடன் கையாண்டு இன்று வெற்றி பெற்று முன்னணி நிறுவனமாக தன் லலிதா ஜூவல்லரியை நடத்தி வருகிறார்.

புதுச்சேரி, தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் லலிதா ஜூவல்லர்ஸ் கிளைகளை நடத்தி வருகிறார். ஆனால் தமிழகத்தில் தான் லலிதா ஜூவல்லர்ஸுக்கு அதிக கிளைகள் உள்ளன.

இது போன்ற தகவல்களை அறியவும் மேலும், ஆன்மீகம், ஜோதிடம், அரசியல், தமிழ் இலக்கியம், உடல்நலம், பண்டிகைகள், செய்திகள் என அனைத்து விதமான தகவல்களையும் அறிந்து கொள்ள தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here