கடவுள் என் முன்னாடி வந்தால் இதை கேட்பேன்-விஜய் ஆண்டனி

0
4

கடவுள் என் முன்னாடி வந்தால் ஜாதி, மதம், கோயில், சாமியார் எல்லாரையும் உலகத்திலேருந்து எடுத்துட்டு, வறுமை, கொலை, கொள்ளைய ஓழிச்சிட்டு, பேசாம நீங்க எங்க கூடவே இருந்துடுங்க சார்னு, request ஆ கேப்பேன் என நடிகர் விஜய் ஆண்டனி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருபவர். தற்போது பாடகராகவும் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பலவற்றில் ஈடுபாடுடன் செயல்பட்டு வருகின்றார். சில தினங்களாக சமூக பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார். மேலும், தன் கருத்துகளையும் டிவிட்டாக போட்டி விடுகிறார். சமீபத்தில் நடந்த சத்யாவை ரயிலில் தள்ளி விட்டு கொன்ற நிகழ்வுக்காக முதல் ஆளாக குரல் கொடுத்து தன் எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.

கடந்த வாரங்களுக்கு முன்னர் டிவிட்டரில், உங்க குடும்பத்துல பிரச்சனைனா, முடிஞ்ச வரைக்கும் உங்களுக்குள்ள அடிச்சிக்கோங்க, இல்ல விட்டு விலகிடுங்க, இல்ல கைல கால்ல விழுந்து சமாதானம் பண்ணி சேர்ந்து வாழ்துடுங்க அடுத்தவன மட்டும் கூப்பிடாதிங்க, கும்மி அடிச்சி கதைய முடிச்சிடுவாங்க என கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு டிவிட்டரில் ஏகப்பட்ட லைக்குகளும் கமென்ட்களும் வரிசை கட்டியது.

கடவுள் என் முன்னாடி வந்தால் இதை கேட்பேன்-விஜய் ஆண்டனி

அதுபோல, சமீபத்தில் நடந்த சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்யா பிரியா தன் சகத் தோழிகளுடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது, ஓரு இளைஞர் அவரிடம் வாக்குவாத்தில் ஈடுப்பட்டார். வாக்குவாதம் முற்றவே எதிரே வந்த ரயில் மீது சத்யாவை தள்ளி கொலை செய்தார். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாக பார்க்கப்பட்டது.

இதையும் படியுஙகள்: பிக்பாஸ் சீசன் 6: போட்டியாளர்களின் ஓருநாள் சம்பளம் பற்றிய தகவல்

இந்த சம்பவத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். திரைத்துறையில் முன்னணி நாயகராக நடித்து வருபவரான விஜய் ஆண்டனி இந்த சம்பவத்திற்கு முதல் ஆளாக தன் கருத்தை பதிவு செய்தார். ”சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.

இந்த கருத்தை பொது மக்கள் வெகுவாக பாராட்டினர். இன்று கடவுள் என் முன்னாடி வந்தா, ஜாதி மதம் கோயில் சாமியார் எல்லாரையும் உலகத்துல இருந்து எடுத்துட்டு, வறுமை கொலை கொள்ளைய ஒழிசிட்டு, பேசாம நீங்க எங்க கூடவே இருந்துருங்க சார்ன்னு, request-ஆ கேப்பேன், என்று கூறி நீங்க என்ன கேட்பிங்கனு கேள்வியும் எழுப்பியுள்ளார்.

இது போன்ற தகவல்களையும் எண்ணற்ற தகவல்களை அறிய தலதமிழ் இணையதளத்தை அனுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here