பற்களில் மஞ்சள் கறையால் சிரமப்படுகிறீர்களா? இந்த பதிவை பாருங்கள்

0
2

பற்களில் மஞ்சள் கறைப்படிவதால் பலர் வாய்விட்டு சிரிக்கக் கூட முடியாத நிலை இன்று நிலவி வருகின்றது. இதனால் பலர் பாதிக்கப்பட்டு சிரமப்படுகின்றனர். அவர்களின் பற்களை எளிதான முறையில் வீட்டி முறைகளின் வழியே பளிச்சென்று மாற்ற சிறிய அறிவுரையை இப்பதிவில் அறியலாம்.

அன்றாடம் நாம் உண்ணும் உணவினை சரிவர தூய்மையாக பாதுகாக்க தவறுவதால் இந்த மஞ்சள் நிற பற்கள் உண்டாக வாய்ப்பு அதிகம் உள்ளது. இதன் விளைவுகளால் பின்னாட்களில் பல தொந்தரவுகளை சந்திக்க நேரிடுகின்றது. நாம் தூங்கி எழுந்தவுடன் சரியாக பற்களை தூய்மைப்படுத்துதல் இன்றியமையாத ஓன்று. இன்று பலவித நவீன முறை மருத்துவம் மூலம் மஞ்சள் நிறம் உள்ள பற்களை வெண்மையாக மாற்றலாம்.

ஓரு முறை மருத்துவரை அணுகி கலந்து ஆலோசனை செய்வது நல்லது. மேலும், பல வீட்டு முறை வழிமுறைகளும் உள்ளது. அதை கீழே காண்போம்.

இதையும் கவனியுங்ள்: புதினா இலையின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்

பற்களில் மஞ்சள் கறையால் சிரமப்படுகிறீர்களா? இந்த பதிவை பாருங்கள்
  • புகைப்பிடித்தல், மது அருந்துதல், காபி மற்றும் டீ அருந்துவதால் கூட சிலருக்கு இந்த மஞ்சள் நிறம் பற்கள் மாறுவதற்கு வழி உண்டு. ஏனெனில், மது அருந்துதல், புகைப்பிடித்தல் இவற்றை தவிர்த்தல் நல்லது.
  • தினமும் 2 கொய்யா இலையை வாயில் போட்டு நன்றாக மென்று அந்த சாறினை பற்களில் புகும்படி உமிழ்நீரினை வைத்து விட்டு அந்த நன்றாக மென்ற இலையை துப்பிவிட வேண்டும்.
  • கற்றாழை ஜெல்லை வாயில் நன்றாக தேய்த்து 10 நிமிடம் ஊர வைத்து பின்னர், குளிர்ந்த நீரில் வாயினை கொப்பளிக்க வேண்டும்.
  • பல் விளக்கும் போது எளிமிச்சை சாற்றுடன் சிறிது உப்பு சேர்த்து துலக்குதல் நல்ல பலனை தரும்.
  • தினமும் ஓரு ஆப்பிள் பழத்தை உண்டு வந்தால் உடல் பலம் அதிகரிப்பதுடன் பற்களில் உண்டாகும் மஞ்சள் கறைகளும் குறையும்.
  • நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் திரிபலா சூரத்தை பயன்படுத்தி பல் துலக்கினால் மஞ்சள் கறைகள் அகன்று விடும்.
  • தினமும் நல்லெண்ணெயில் வாய் கொப்பளித்து வருவதன் மூலமும் அழகான வெண்மையான பற்களை பெறலாம்.
  • தூள் உப்பினை பயன்படுத்தி பற்களை துலக்கி வருவதன் மூலம் மஞ்சள் கறையை விரட்டலாம்.
  • எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு தோள்களை கொண்டு பல் துலக்கி வந்தால் மஞ்சள் கறை நீங்கிவிடும்.
  • சாப்பிட்டு முடித்தவுடன் உப்பு கலந்த நீரில் வாய் கொப்பளிப்பதன் மூலமும் மஞ்சள் கறைப்படிவதை தடுக்கலாம்.

இது போன்ற பல இயற்கை வீட்டு முறைகளை பயன்படுத்தி மஞ்சள் கறை உள்ள பற்களை தூய்மையான வெண்மையான பற்களை பெறலாம். எதற்கும் ஓரு மருத்துவ அறிவுரை சென்று வருவதும் நன்மையை தரும்.

இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here