“இப்தார் நோன்புக்கு உதவிய இந்தியன் ரயில்வே”

0
6

இப்தார் நோன்பு என்பது இஸ்லாமியர்களின் கடைமைகளில் ஓன்றாக பார்க்கப்படுகறது. ரமலான் மாதம் தொடங்கியதும் அவர்கள் நாள் முழுவதும் உண்ணாமல் இருந்து அவர்களது இறைவனை நனைத்து தொழுகை செய்து  வணங்குவது வழக்கம் அப்படி ஓருவர் சதாப்தி ரயிலில் பயணம் செய்த போது ரயில்வே ஊழியரிடம் சிறிது நேரம் கழித்து வந்து டீ கொடுக்க கூறினார்.

அவ்வூழியரோ இப்தார் இருப்பதை புரிந்து கொண்டு அவருக்கு ஓரு தட்டில் பழங்கள் சமோசா என அனைத்தையுன் கொடுத்து ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

"இப்தார் நோன்புக்கு உதவிய இந்தியன் ரயில்வே''
“இப்தார் நோன்புக்கு உதவிய இந்தியன் ரயில்வே”

ரமலான் நோன்பு என்பது வெறும் உணவை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது மட்டுமல்லாமல் நீர் அருந்தாமல், புகைக்காமல், வேறு எந்த ஒரு தீய பழக்கங்களிலும் ஈடுபடாமல் இருப்பதாகும். இது இஸ்லாமியர்களுக்கான 3 கடமையாகும்.

புனித ரமலான் மாதம் தொடங்கி, இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகின்றனர். இந்நிலையில் உலகம் முழுவதும் 2022 ஆம் ஆண்டுக்கான ரம்ஜான் மே 2ம் தேதி அல்லது 3ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.

இதற்கிடையில், தனக்கு எப்படி இப்தார் அளிக்கப்பட்டது என்ற விபரங்களை பயணி பகிர்ந்து கொண்டார். “இந்தியன் ரயில்வேக்கு இப்தாருக்கு நன்றி. நான் தன்பாத்தில் ஹவுரா சதாப்தியில் ஏறியவுடன், எனது சிற்றுண்டி கிடைத்தது. நான் உண்ணாவிரதம் இருப்பதால் சிறிது தாமதமாக தேநீர் கொண்டு வருமாறு பேன்ட்ரி மனிதரிடம் கேட்டுக் கொண்டேன். அவர் ஆப் ரோஜா ஹாய் என்று கேட்டு உறுதிப்படுத்தினார். நான் தலையசைத்தேன். ஆம், பின்னர் வேறு ஒருவர் இப்தாருடன் (sic) வந்தார்” என்று ஷாநவாஸ் அக்தர் தனது உணவின் புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டார்.

இஸ்லாமிய ரயில் பயணிக்கு அவரின் இப்தார் நோன்பின் மாண்பை போற்றும் வகையில் அவருக்கு அளித்த உணவு பெரும் வரவேற்பையும் அன்பையும் சகோதரத்துவத்தையும் ஓற்றுமையையும் பறைசாற்றுவனவாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here