இலந்தை வடை செய்முறை: இலந்தை பழத்தில் பல வகையான மருத்துவ குணங்கள் உள்ளது. இயற்கையாக கிடைக்கும் பழங்களுக்கு மருத்துவ குணங்கள் ஏராளம். இலந்தை பழத்தில் வைட்டமின் ஏ, சுண்ணாம்பு சத்துகள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து போன்ற பலவிதமான சத்துகள் உள்ளன.
இலந்தை பழத்தில் இருவகை காணப்படுகிறது. சீமை இலந்தை பழம், நாட்டு இலந்தை பழம். சீமை இலந்தை பழமானது பெரியதாக பெரிய நெல்லிக்கனியை போல பெரியதாக காணப்படும். நாட்டு இலந்தை பழமானது சிறியதாக காணப்படும். இந்த சிறிய இலந்தை பழத்தைக் கொண்டு தான் இலந்தை வடை செய்வர்.
இலந்தை பழம் உட்கொள்வதால் வாந்தி, மயக்கம், செறிமானக் கோலாறு போன்றவை குணமாகும். இந்த இலந்தை பழத்தை இலந்தை வடையாகவும் செய்து சுவைக்கலாம். இது தமிழ்நாட்டில் பிரபலம்.

இலந்தை வடை செய்ய தேவையான பொருட்கள்:
- இலந்தை பழம் – 200 கிராம்
- காய்ந்த மிளாகாய் – காரத்திற்கு ஏற்ப 4 (அ) 5
- வெல்லம் – 100 கிராம்
- கல் உப்பு தேவையான அளவு
- பெருங்காயத் தூள் 3 சிட்டிகை
இலந்தை வடை செய்முறை:
இலந்தை பழத்தை நன்றாக தண்ணீரில் அரை மணி நேரம் ஊர வைக்கவும் பின்னர் காம்புகளை நீக்கி துணியில் உலர வைக்கவும். பின்னர் உரலில் இலந்தை பழதத்தை போட்டு உலக்கைக் கொண்டு நன்றாக குத்தவும். இலந்தையில் உள்ள கொட்டை மற்றும் பழம் தினியாக வரும் அளவில் குத்தவும். அதனுடன் கல் உப்பை போட்டு இடிக்கவும் அடுத்தது காய்ந்த மிளகாவை போட்டு இடிக்கவும்.
பின்னர், வெல்லத்தை போட்டு குத்தவும் இலந்தை பழம், உப்பு, மிளாகாய் என அனைத்தும் கலந்து நன்றாக வரும் வரை குத்தவும். பின் பெருங்காயத் தூளை சேர்த்து குத்தியவுடன் நன்றாக வாசணையுடன் கூடிய இலந்தை வடை தயாராகும். அதனை அப்படியே பெரிய தட்டில் வடை தட்டுவது போல தட்டி வெளியிலில் நன்றாக காய விடவும்.
இதையும் படியுங்கள்: இலந்தை பழத்தில் காணப்படும் மருத்துவ குணங்கள்
இரண்டு மணிநேரம் ஆனதும் இலந்தை வடையை மறுப்பக்கம் திருப்பி விட்டு காய வைக்கவும் பின்னர், 1 மணிநேரம் ஆனதும் அதனை எடுத்து விடலாம். இவ்வாறு செய்து வந்தால் நாக்கின் உமிழ்நிரை ஈர்க்கும் இலந்தை வடை தயாராகி விடும். அதை ரூசித்து மகிழலாம்.
இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.