23 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் இளையராஜா-ராமராஜன் கூட்டணி

0
8

ராமராஜன்: தமிழ் திரையுலகில் கடந்த 45 வருடங்களாக நடித்து வருபவர் நடிகர் ராமராஜன். உதவி இயக்குனராக பணிபுரிந்து பின்னர் படங்களில் சிறிய வேடங்களில் நடித்து பின்னர் 1986ல் ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் ராமராஜன். 1987ல் வெளியான ‘ஒன்று எங்கள் ஜாதியே’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் கடைசியாக 2012ல் வெளியான ‘மேதை’ படத்தில் நடித்திருந்தார். கடந்த 10 வருடமாக எந்த படங்களிலும் அவர் நடிக்கவில்லை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ‘சாமானியன்’ படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இதில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். எட்செட்ரா எண்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார். அருள் செல்வன் ஒளிப்பதிவு செய்ய, ஆர்.ராகேஷ் எழுதி இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘தம்பிக்கோட்டை’, ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், சினேகன் பாடல்களை எழுதுகின்றனர்.

ramarajan-ilayaraja reunite with samaniyan

ராமராஜனின் வெற்றிக்கு காரணமானவர்களில் இசைஞானி இளையராஜா மிகவும் முக்கியமானவர். அதனால் சில நாட்களுக்கு முன்பு ராமராஜன் இளையராஜாவை சந்தித்து அவரது காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். இளையராஜாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு ‘பல வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க வந்துள்ளேன். என் படத்துக்கு நீங்கள்தான இசையமைக்க வேண்டும்’ என்றார். அதற்கு இளையராஜா சிரித்தபடி ‘பண்ணிட்டா போச்சு’ என்றார். ‘சாமானியன்’ படத்தில் 23 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அவர்கள் இணைந்துள்ளனர். இதற்கு முன்பு கடைசியாக 1999ல் ராமராஜன் நடித்த ‘அண்ணன்’ என்ற படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here