இயக்குநர் வெங்கட் பிரபுவின் நீண்ட கால ஆசை நிறைவேறியதாக தெரிவித்துள்ளார். முதன் முறையாக தான் இயக்கும் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசைப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் என் நீண்ட நாள் ஆசை நிறைவேறியதாகவும் கூறியுள்ளார்.
சென்னை 28 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. தொடர்ந்து சரோஜா, கோவ, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, மாநாடு, மன்மத லீலை என பல படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் முதல் முறையாக தெலுங்கு படத்தை இயக்குகிறார் வெங்கட் பிரபு. நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர். தற்காலிகமாக என்சி 22 என குறிப்பிடப்படும் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.