IMDB 2022: தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த நடிகர் தனுஷ்

0
6

IMDB 2022: இந்திய அளவில் முதலிடம் பிடித்த நடிகர் தனுஷ் இந்தாண்டு தொடர்ந்து பல வெற்றி படங்களை தந்ததால் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் நடிகர் தனுஷ்.

சினிமா தகவல்களை தருகின்ற முதன்மையான நிறுவனமாக விளங்கும் ஐஎம்டிபி என்னும் வலைதளம் ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரையிலான விமர்சனங்கள், தகவல்கள், ரேட்டிங் என அனைத்தையும் வழங்கும் வலைதளமாக மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று இயங்கி வருகின்றது. இந்த இணையதளத்தில் உலக அளவிலான படங்களின் புள்ளிப் பட்டியல் மற்றும் இந்திய அளவில் அதிக புள்ளிகளை பெற்ற படங்கள் வரையிலான அனைத்து தகவல்களையும் சேகரித்து வழங்கி வருகின்றது.

IMDB 2022: தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த நடிகர் தனுஷ்

அது போல, இந்தாண்டுக்கான (2022) இந்திய அளவில் முதல் 10 இடங்களை பிடித்த நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் முதலிடத்தை பிடித்திருப்பவர் தமிழ் திரையுலகின் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் இந்தாண்டு வெளியான ‘தி கிரேட் மேன்’ என்ற ஆங்கில படம் நெட்ப்ளிக்ஸ் இணையதளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து தமிழில் மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் வாத்தி என்ற படமும் இந்த மாத இறுதியில் வெளியாக உள்ள நிலையில் அவருக்கான ரேட்டிங் அதிகமாக உள்ளது. IMDB க்கு உலக அளவில் 200 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சிறப்பான பங்களிப்பை நல்கி வருகிறது.

IMDb 2022 இன் மிகவும் பிரபலமான இந்திய நட்சத்திரங்கள்

1. தனுஷ்

2. ஆலியா பட்

3. ஐஸ்வர்யா ராய் பச்சன்

4. ராம் சரண் தேஜா

5. சமந்தா ரூத் பிரபு

6. ஹிருத்திக் ரோஷன்

7. கியாரா அத்வானி

8. என்.டி.ராமராவ் ஜூனியர்.

9. அல்லு அர்ஜுன்

10. யாஷ்

இந்திய அளவில் முதல் 10 இடங்களை பெற்றுள்ள பிரபலமான நட்ச்சத்திரங்களின் தொகுப்பை ஐஎம்டிபி நிறுவனம் வெளியிட்டது. அதில் முதல் இடத்தை பிடித்துள்ளார் நடிகர் தனுஷ்.

இதையும் படியுங்கள்: சிலம்பம் கற்கும் நடிகை மாளவிகா மோகன் இயக்குனர் பா.ரஞ்சித் படத்திற்காக

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பினபற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here