சீனாவில் சில இடங்களில் திடீர் புழு மழை

0
5

பெய்ஜிங்: சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள வாகனங்கள் மீது திடீரென புழுக்கள் மழையாக பொழிந்து நிரம்பி கடந்த காட்சிகள் வெளிவந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதுபற்றிய வீடியோவில் வரிசையாக நிற்கும் கார்களின் மீது பெரிய தடினமான அளவுள்ள பழுப்பு நிறத்தில் வளைந்தும் நெளிந்தும் போர்வை போன்று புழுக்கள் போன்ற உயிரினம் படர்ந்து காணப்படுகிறது. இதற்கான காரணம் என்னவென இதுவரை தெரியாத போதும் பலத்த காற்றில் அடித்து வரப்பட்டு இவை இந்த பகுதியில் மேலிருந்து கீழே போடப்பட்டு இருக்கும் என மதர் நேச்சர் என்ற அறிவியல் பத்திரிக்கை தெரிவிக்கின்றது.

chaina capital beijing suddenly falla worm rain

எனினும், சீன பத்திரிக்கையாளரான ஷென்ஷிவெய் கூறுகையில், வீடியோ போலியானது. நான் பெய்ஜிங்க நகரிலேயே இருக்கிறேன். சமீப நாட்களாக பெய்ஜிங்கில் மழைப்பொழிவெ இல்லை என தெரிவித்துள்ளார். புழுக்கள் கீழே விழுவது இயல்பானது என்றும் வசந்த காலத்தின் போது இதுபோன்று ஏற்படும் என்றும் சிலர் கூறுகின்றனர். ஒரு சிலர் அவை புழுக்கள் அல்ல என்றும் அவை கம்பளி பூச்சிகள் என்றும் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here