ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்து கோவில் திறப்பு. துபாய் நாட்டிலேயே மிக பழைமையான இந்து கோயிலான சிந்தி குரு தர்பார் கோயில் புர் துபாயில் 1950களில் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்னொரு பிரம்மாண்ட கோயில் ஒன்றை கட்டமைக்க திட்டமிடப்பட்டது.
மத நல்லினக்கத்திற்கு சான்றாக இருந்து வரும் ஐக்கிய அரபு அமீரகம் அங்கு இந்துக்களின் கோவில், கிஸ்த்துவர்களின் சர்ச், புத்த மதத்தை போற்றும் வகையில் புத்தர் கோவில், சீக்கிய குருத்துவார் போன்ற அனைத்து மத மக்களும் போற்றி வணங்கும் கோவில்களை கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, ரூ.148 கோடி செலவில் சுமார் 25,000 சதுர அடி பரப்பளவில், தனித்துவ அரபு டிசைனில் துபாயின் ஜபேல் அலி பகுதியில் புதிய இந்து கோயில் ஒன்றை கட்ட திட்டமிடப்பட்டது. இதற்கு துபாய் அரசு அனுமதியும் பெறப்பட்டது. இந்த கோயிலுக்கு கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.

துபாய் வழிபாடு பகுதி என அழைக்கப்படும் ஜபேல் அலியில் இந்த கோயில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏற்கனவே, சீக்கிய குரு நானக் தர்பார், கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளிட்டவைகள் உள்ளன. அனைத்து மதத்தினரையும் வரவேற்கும் இந்த கோயிலில், 16 தெய்வங்களின் சிலைகள், குரு கிரந்த சாஹிப், சீக்கியர்களின் புனித புத்தகம் உள்ளிட்டவைகள் உள்ளன. கோயிலின் உட்புற கட்டட வடிவமைப்பு தனித்துவமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு மற்றும் இந்திய அதிகாரிகள் இணைந்து இக்கோவிலை இன்று திறந்துள்ளனர். இந்த கோவிலில் பொது மக்களுக்கு நாளை முதல் வழிபாடு நடத்த தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றது துபாய் அரசு. இதுபோன்ற செயல்களினால் அந்த நாட்டின் மத நல்லினக்கணம் வெளிப்படுகிறது.