IND VS AUS T20: வாம்அப் மேட்ச்சில் இந்தியா இறுதி ஓவரில் திரில் வெற்றி

0
3

IND VS AUS T20: டி20 உலக கோப்பைக்கான போட்டிகள் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில் பயிற்சி ஆட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளது. இன்று இந்தியா ஆஸ்திரேலியாவுடனான பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இதில் முதலாவதாக பேட் செய்த இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை சேர்த்தது. ஆஸ்திரேலியா இந்த இலக்கை அடைய முடியாமல் தோல்வியை தழுவியது.

2022ஆம் ஆண்டு டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டி நாளை முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. மொத்தம் 16 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கிறது.முதல் சுற்று போட்டிகள் நாளை முதல் தொடங்குகிறது. வரும் 22ஆம் தேதி மெயின் சுற்று போட்டிகளான சூப்பர் 12 சுற்று ஆட்டம் தொடங்குகிறது.

இந்நிலையில், இன்று முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொண்டது. டாஸை வென்ற ஆஸ்திரேலியா முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய அறிவுறித்தியது.

IND VS AUS T20: வாம்அப் மேட்ச்சில் இந்தியா இறுதி ஓவரில் திரில் வெற்றி

முதலாவதாக களம் இறங்கிய கே.எல்.ராகுல் அதிரடியாக ஆஸ்திரேலிய பந்துவீச்சினை சிதறடித்து 33 பந்துகளில் 57 ரன்களை கடந்த போது அவுட்டாகி வெளியேறினார். முதலாவதாக ரோஹித் சர்மா இந்திய கேப்டன் 15 ரன்களில் அவுட்டானார். விராட் 19 ரன்களிலும் வெளியேறினார். சூர்யகுமார் யாதவ் நிலைத்து ஆடி தன் பங்கிற்கு அரைசதம் கடந்து இந்திய அணியின் ரன்கள் அதிகரிக்க உதவினார்.

அரைசதம் கடந்த போதே அடுத்த பந்தில் ஸ்கை அவுட்டானார். பாண்டியா 2 ரன்களுடனும் தினேஷ் கார்த்திக் 20 ரன்களுடனும் வெளியேறினர். பட்டேல் 6 ரன்களுடனும் ரவிச்சந்திர அஸ்வின் 2 பந்துகளில் ஓரு சிக்சருடன் 6 அடித்து இறுதி பந்தில் அவுட்டாகி வெளியேறினார். இறுதியாக இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை இலக்காக வைத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ரிச்சட்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எண்ணத்துடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் 5 ஓவர் வரை விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் கடந்தனர். ஆரோன் பின்ச் அதிகபட்சமாக 76 ரன்கள் சேர்த்தார். மிட்சல் மார்ஷ் 35 ரன்கள் சேர்த்தார். அதன்பின் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்கள் எடுத்து வந்தனர்.

இறுதியில் 1 ஓவர்களில் ஆஸ்திரேலிய வெற்றி பெறும் என்ற நிலையில் இருந்தது இந்திய பந்து வீச்சாளர் முகமது ஷமி பந்து வீசி அந்த ஓரு ஓவரில் 4 விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இறுதியாக 1 ஓவர் வீசி 4 விக்கெட் எடுத்த முகமது ஷமியின் பந்து வீச்சால் இந்தியா அபார வெற்றி பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here