IND VS BAN 2 ODI: இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையேயான 2வது ஓடிஐயில் இந்தியாவிற்கு வங்கதேசம் 272 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மெகந்தி ஹாசன் மற்றும் முகமதுல்லா நிதானமாக நிலைத்து நின்று முறையே 100, 77 ரன்களை அடித்தனர்.
டி20 உலக கோப்பை தொடரில் அரையிறுதி வரை சென்று தோல்வி அடைந்த இந்திய அணி பலரின் விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளது. நியூசிலாந்து மண்ணிலும் சொல்லும் அளவிற்கு தன் பங்கினை தர தவறிவிட்டதாகவும் ரசிகர்களால் கூறப்படுகிறது. தற்போது, 3 ஓருநாள் தொடர் 2 டெஸ்ட் தொடர்களில் விளையாட வங்கதேசத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளது.
முதல் ஓருநாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் இரண்டாவது போட்டி இன்று நடைபெற்று வருகிறது. டாஸை வென்ற வங்கதேச அணி முதலாவதாக பேட்டிங் செய்வதாக கூறி பேட்டிங் செய்தது. முதல் 6 விக்கெட்டுகளை 19 ஓவர்களில் 69 ரன்கள் எடுத்திருக்கும் போது 6 விக்கெடை இழந்து தடுமாறி வந்தது.

வங்கதேச அணி விளையாட தொடங்கியது முதலே பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியினர் தொடர்ந்து விக்கெட்டுகளை எடுத்து வங்கதேசத்திற்கு பயத்தை காட்டினர். இருப்பினும் இறுதியாக கைகோர்த்த மெகந்தி ஹாசன் மற்றும் முகமுதுல்லா இணையால் வங்கதேசத்தின் ரன்கள் மளமளவென எகிறியது.
மெகந்தி ஹாசன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 83 பந்துகளில் 4 சிக்சர் 8 போர்களை தெரிக்க விட்டார். முகமுதுல்லா 96 பந்துகளில் 77 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் 271 ரன்களை இந்திய அணிக்கு நிர்ணயித்தது.
இந்திய அணி சார்பில் முகமது சீராஜ் 2 விக்கெட்களையும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளையும் சர்துல் தாகூர் 10 ஓவர்கள் வீசி 47 ரன்களை கொடுத்து விக்கெட் எடுக்காமல் இருந்தார். இந்த நிலையில் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணிக்கு ஏற்பட்ட விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
இதையும் படியுங்கள்: FIFA WORLD CUP 2022: காலிறுதிக்கு தகுதி பெற்றது குரோஷி மற்றும் பிரேசில் அணி
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின் தொடருங்கள்.