IND VS ENG: இந்தாண்டின் டி20 உலக கோப்பைக்கான போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. குரூப் ஏ, குரூப் பி என்று இரு அணிகளாக பிரிக்கப்பட்டு அதில் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறம் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியே அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறாத கடினமான நிலை ஏற்பட்டது.
சூப்பர் சுற்று போட்டியில் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு அணிகளே அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். அதன்படி, குரூப் ஏ பிரிவில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றன. குரூப் பி பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்றது.
இந்நிலையில், பாகிஸ்தான் நியூசிலாந்தை வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இன்று நடக்கும் இந்தியா இங்கிலாந்து போட்டியில் வெற்றி பெறும் அணியே இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்ற நிலையில் இரு அணி வீரர்களும் தங்களது திறமையை காட்டி வந்தனர்.
இதையும் படியுங்கள்: டி20 போட்டிகளில் புதிய சாதனையை நிகழ்த்தினார் விராட் கோலி

டாஸை வென்ற இங்கிலாந்து அணி முதலாவதாக பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் ஓப்பனர்களான கேஎல் ராகுல் மற்றும் கேப்டன் ரோஹூத் சர்மா களம் இறங்கினர். ராகுல் 5 ரன்களில் வோக்ஸ் பந்து வீச்சில் வெளியேறினார். கேப்டன் நிதானமாக விளையாடி 27 ரன்களை கடந்து ஜோர்டன் பந்தில் அவுட்டாகினார். வீராட் கோலி மட்டும் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடி அரைசதம் கடந்தார். அடுத்த பந்திலேயே ஜோர்டன் வீசிய பந்தில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
அதிரடியாக விளையாடி வரும் இளம்புயல் 360 என்று புகழப்படும் சூர்யகுமார் யாதவ் 14 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ரிஷப்பும் அவுட்டாகினார். யாதவ்விற்கு பதிலாக ஹர்திக் பாண்டியா அதிரடி காட்டினார். 33 பந்துகளில் 63 ரன்களை குவித்திருந்தார். இறுதியாக ஜோர்டன் வீசிய பந்தில் பவுண்டரிக்கு அனுப்பிய ஹர்திக் தெரியாமல் தன் காலை ஸ்டிக்கில் வைத்தார் இதனால் ஹூட் அவுட் முறையில் அவுட்டாகி பவுன்டரியும் கிடைக்காமல் வெளியேறினார்.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களை எடுத்திருந்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்தின் ஓப்பனர்களான பட்லரும் ஹாலிசும் அதிரடியாக விளையாடி வந்தனர். இருவரும் அரைசதம் கடந்தனர். ஹாலிஸ் மிகவும் அதிரடியாக விளையாடினார்.
இருவரும் 80 ரன்களை கடந்தனர். இறுதியாக 169 ரன்களை 16 ஓவர்கள் முடிவில் 170 ரன்களை எடுத்து 1 விக்கெட் கூட இழப்பின்றி அருமையான விளையாட்டை ஆடிய இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் வருகின்ற 13 ந் தேதி பாகிஸ்தானுடன் இறுதி போட்டியில் களம் காண்கிறது இங்கிலாந்து.
இந்த நிலையில் தோல்வியை தழுவிய இந்திய அணி வீரர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.