இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வந்த ஓருநாள் தொடர் போட்டியை வென்று இந்தியா அசத்தியது.
இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிய 3 வது ஓருநாள் போட்டியில் இந்திய அணியின் ரிஷப் பந்தின் சதத்தால் வெற்றியை அடைந்தது. இந்தியா இங்கிலாந்து இடையே இங்கிலாந்து மண்ணில் டி20, டெஸ்ட தொடர், ஓருநாள் போட்டிகள் நடைபெற்றது. இதில் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. டி20 போட்டியில் இந்தியா அணி தொடரை கைப்பற்றியது. ஓருநாள் போட்டியிலும் இந்தியா அணியே ஆதிக்கம் செலுத்தி தொடரை வசமாக்கியது.
3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியாவும், 2-வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுஇருந்தன. இந்நிலையில் 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று மான்செஸ்டரிலுள்ள ஓல்டு டிராபோர்ட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை சீராஜ் வெளியேற்றினார். அதன் பின் வந்தவர்கள் நிதானமான ஆட்டத்தினால் இங்கிலாந்து அணி 45.5 பந்தில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 259 ரன்களை அடித்தது.
இந்திய அணி சார்பாக சீராஜ் 2 விக்கெட்களும், பாண்டியா 4ம் சாஹல் 3, ஜடேஜா 1ம் என விக்கெட்களை கைப்பற்றினர். இதன் பின் 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என இந்திய அணி வீரர்கள் இறங்கினர். தொடர்ந்து விக்கெட்களை இழந்து தடுமாறிய போது ரிஷாப் பந்தும் பாண்டியாவும் சேர்ந்து நிதானமாக ஆடி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்று ஓருநாள் தொடரை இந்திய அணிக்கு கொடுத்தனர். ரிஷப் பந்து 113 பந்தில் 125 ரன்னும் பாண்டியா 71 ரன்னும் எடுத்தனர்.