IND VS NZ 1 ODI: இந்திய அணி டி20 உலக கோப்பையில் தோல்வியை தழுவியதற்கு பின் நியூசிலாந்து உடனான போட்டிகளில் கலந்து கொள்ள நியூசி மண்ணிற்கு பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு நடைபெற்ற டி20 போட்டியில் முதல் போட்டியானது மழையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின் 2 வது போட்டியில் சூர்யகுமாரின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது. 3 வது போட்டி விறுவிறுப்பாக நடந்து வந்த போது மழைக் குறுக்கிட்டதால் பாதியிலேயே நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு DLS முறையில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றதாக கூறப்பட்டது.
இந்நிலையில், முதலாவது ODI நியூசி ஈடன் பார்க் மைதானத்தில் இன்று காலை இந்திய நேரப்படி 7 மணிக்கு தொடங்கியது. டாஸை வென்ற நியூசி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணியின் ஓப்பனர்களான தவானும் கில்லும் இணைந்து சிறப்பான தொடக்கத்தை அளித்து வந்தனர்.

20 ஓவர்கள் முடிந்த பிறகு கேப்டன் தவான் 72 ரன்களிலும் கில் 50 எடுத்திருந்த போது ஆட்டமிழந்தனர். நல்ல தொடக்கத்தை தந்த போதிலும் அடுத்து வந்த ரிஷாப் பன்ட் மற்றும் சூர்யகுமார் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து இந்திய அணியை தடுமாற்றத்திற்கு தள்ளினர். அதிகபட்சமாக டிம் சவுத்தி மற்றும் பெராங்குசன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் வந்த ஸ்ரேயாஷ் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் நன்றாக விளையாடி இந்திய அணியின் ரன்களை உயர்த்தினர். இருப்பினும் சஞ்சு 36 ரன்களிலும் ஸரேயாஷ் 80 ரன்களிலும் விக்கெட்டை இழந்து வெளியேறினார். பின் வந்த வாஷிங்டன் சுந்தர் 16 பந்துகளில் 37 ரன்களை அதிரடியாக குவித்தார். இதனால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்களை குவித்தது.
307 ரன்கள் என்ற இலக்கை தொடர்ந்து துரத்திய நியூசியின் முதல் ஆட்டக்காரர்களான ஆலன் மற்றும் கான்வேயின் விக்கெட்டுகளை இந்திய பவுலர்கள் வீழ்த்தினர். நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 98 பந்துகளில் 94 ரன்களை குவித்தார். இவருடன் கைகோர்த்த டிம் லாதம் அதிரடியாக விளையாடி 104 பந்துகளில் 145 ரன்களை குவித்தார். இவர் 19 பவுன்டரிளையும் 5 சிக்சர்களையும் பறக்கவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: உலக கால்பந்து போட்டியால் IFIFA விற்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு தெரியுமா
இந்திய அணியில் அதிகபட்சமாக உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷர்துல் 1 விக்கெட்டை வீழ்த்தினார். 47.1 பந்துகளில் 309 ரன்களை நியூசிலாந்து வீரர்கள் எடுத்து வெற்றியை பதிவு செய்தனர். 3 தொடர்களை கொண்ட இத்தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
இது போன்ற பலவித தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.