IND VS NZ 1 ODI: 50 ஓவர் ஓருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இந்திய அணி வீரர்களினால் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்களை குவித்து உள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் தோல்வியை தழுவிய இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் நியூசிலாந்து மண்ணில் 3 டி20 போட்டிகள் 3 ஓருநாள் தொடர்களில் விளையாட திட்டமிட்டு விளையாடி வருகிறது. இதன் முதலாவது டி20 தொடர் சமமான நிலையில் தற்போது ஓருநாள் தொடரின் முதல் போட்டி நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்தில் ஈடன் பார்க் என்ற மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த 50 ஓவர் போட்டியில் முதலாவதாக டாஸை வென்ற நியூசி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி வீரர்களின் ஓப்பனர்களான கேப்டன் ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் இந்திய அணிக்கு வலுவான பாதையை அமைத்தனர்.

ஆரம்பம் முதலே நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடினர். இவர்கள் 23.1 ஓவர்கள் வரை 124 என்ற ரன்களை அடித்து சிறப்பான ஆட்டத்தை வழங்கினர். பவர் ப்ளேவிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அரை சதமடித்த சுப்மன் கில் 1 பவுண்டரி 3 சிக்ஸருடன் 50 (65) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் சற்று அதிரடியாக விளையாடிய கேப்டன் தவான் அரை சதமடித்து 13 பவுண்டரியுடன் 72 (77) ரன்களில் அவுட்டானார். அப்போது களமிறங்கிய ரிஷப் பண்ட் வழக்கம் போல 2 பவுண்டரியுடன் 15 (23) ரன்களில் ஆட்டம் இழந்தார். அதிரடிக் காட்டுவார் என்று நம்பிய சூரியகுமார் 4 (3) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.
அதனால் 160 ரன்களுக்கு இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு தடுமாற்றத்தை சந்தித்து. தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயரும் மறுமுனையில் சஞ்சு சாம்சனும் நல்ல பார்டனர் ஷிப்பை தொடர்ந்து வழங்கினர். ஸ்ரேயாஸ் சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதி ஓவரில் 4 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 80 பந்துகளில் 76 ரன்களை குவித்து அவுட்டாகினார். மறுமுனையில் சஞ்சுவும் 38 பந்துகளில் 36 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
இறுதி நேரத்தில் களம் இறங்கிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 16 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 36 ரன்களை குவித்து இந்திய அணிக்கு ரன் உயருவதற்கு உதவினார். ஆட்டத்தின் 49.6 வது பந்தில் ஷர்துல் தாக்கூர் அவுட்டாகி இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழந்து 306 ரன்களை குவித்தது.
நியூசிலாந்து பந்து வீச்சில் அதிகபட்சமாக டிம் சவூத்தி மற்றும் பெரிங்குசன் ஆகிய இருவருக்கும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்நிலையில் நியூசி 307 ரன்களை இலக்காக விளையாடி வருகிறது.
இதையும் படியுங்கள்: ரோஹூத், விராட் ஆகியோரின் சாதனையை சமன் செய்தார் சூர்யகுமார் யாதவ்
இது போன்ற பல தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.