நியூசிக்கு எதிரான முதல் ஓருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்த சுப்மன் கில். இந்தியா 349 ரன்களை குவித்து நியூசிலாந்துக்கு கடுமையான இலக்கை நிர்ணயித்தது.
நியூசிலாந்து அணி இந்தியாவில் மூன்று ஓருநாள் தொடர் மற்றும் மூன்று டி20 தொடரில் பங்கு பெறுவதற்காக வந்துள்ளது. இதில் முதல் ஓருநாள் தொடர் இன்று ஹதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலாவதாக பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதில் தொடக்க ஆட்டக்காரான சுப்மன் கில் மற்றும் ரோஹூத் சர்மா விளையாடி வந்த நிலையில் ரோஹூத் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த விராட் கோலி 8 ரன்களில் ஆட்டமிழந்து இந்திய ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தினார்.
இவரை தொடர்ந்து இஷான் கிஷான் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடி ஆட்டக்காரரான சூர்யாகுமார் யாதவும் 31 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி தடுமாற்றத்தை சந்தித்தது. இருப்பினும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சுப்மன் கில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்து 149 பந்துகளில் 19 பவுன்டரிகள் 9 சிக்ஸர்களுடன் 208 ரன்களை குவித்து இறுதியில் ஆட்டமிழந்தார். இவரின் இரட்டை சதத்தால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்களை எடுத்தது.

இளம் வயதில் இரட்டை சதம் அடித்த இஷான் கிஷன் சாதனையை தனது 23 வயதில் இரட்டை சதத்தை பதிவு செய்தார் கில். இஷான் கிஷன் தனது 24 வயதில் இந்த சாதனையை படைத்திருந்தார்.
ஓருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்தவர்களில் இரண்டாம் இடத்தை பெற்றார். பாகிஸ்தானின் ஃபகார் ஜமான் 18 ஒருநாள் இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை அடித்தார். அவர் முதலிடத்தில் உள்ளார். 19 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை எடுத்த வரிசையில், ஷுப்மான் கில், பாகிஸ்தானின் இமாம்-உல்-ஹக் இருவரும் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: Ms Dhoni: சொத்து மதிப்பு மற்றும் அவரிடம் உள்ள கார்களின் விபரம்
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.