Home செய்திகள் IND VS NZ: இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் நியூசிலாந்து அணி அறிவிப்பு

IND VS NZ: இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் நியூசிலாந்து அணி அறிவிப்பு

0
2

IND VS NZ: இந்தியாவுக்கு எதிரான போட்டிகள் இந்த மாதம் தொடங்குகிறது. இதில் 20 ஓவர் போட்டிகள் ஓருநாள் போட்டிகள் நடைபெற இருக்கின்றது. இந்த போட்டிகளுக்கான வீரர்களை நியூசிலாந்து அணி அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த டி20 ஓவர் போட்டிகளில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியாமல் இருந்ததை ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கடுமையான விமர்சனத்தை தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இரு அணிகளுக்கும் எதிரான போட்டிகளை நடத்த பிசிஐஐ திட்டமிட்டது.

அதன்படி, இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்யவுள்ளது. இந்நிலையில், இந்திய அணிக்கு எதிரான போட்டிகளில் களம் காண நியூசிலாந்து அணி வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது. நியூசி மண்ணில் நடைபெறும் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ரோஹூத் மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது.

இதையும் கவனியுங்கள்: தமிழக விளையாட்டு வீரர்களுக்கு உயரிய விருதுகள் வழங்கப்படவுள்ளது

IND VS NZ: இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் நியூசிலாந்து அணி அறிவிப்பு

நியூசிலாந்து அணிக்கு கேப்டனாக கேன் வில்லியம்ஸ்னே களம் இறங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு ஹர்த்திக் பாண்டியா கேப்டனாக இருப்பார். 50 ஓவர் ஓருநாள் போட்டிக்கு தவான் கேப்டனாக இருந்து இந்திய அணியை வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு விவிஎஸ் லஷ்மன் இப்போட்டிக்கு தலைமை பயிற்சியாளராக இருப்பார் என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

மூன்று ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி 20-ந் தேதியும், 3-வது போட்டி 22-ந் தேதியும் நடக்கிறது. 3 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் 25-ந் தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில் இந்தியாவிற்கு எதிரான போட்டிகளில் களம்காண நியூசிலாந்து அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்போட்டியில் கப்டில் மற்றும் டிரன்ட் போல்ட் இடம் பெறவில்லை.

20 ஓவர் போட்டி: வில்லியம்சன் (கேப்டன்), பின் ஆலென், மைக்கேல் பிரேஸ்வெல், டேவன் கான்வே, டேரிஸ் மிட்செல், கிளைன் பிலிப்ஸ், ஜிம்மி நீசம், மிச்செல் சான்ட்னெர், பெர்குசன், சோதி, டிம் சவுதி, டிக்னெர், ஆடம் மில்னே.

ஒருநாள் போட்டி: வில்லியம்சன் (கேப்டன்), பின் ஆலென், டாம் லாதம், டேவன் கான்வே, மைக்கேல் பிரேஸ்வெல், டேரிஸ் மிட்செல், ஜிம்மி நீசம், பிலிப்ஸ், சான்ட்னெர், டிம் சவுதி, மேட் ஹென்றி, ஆடம் மில்னே, பெர்குசன்.

இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here