INDVSSL 1 ODI: கோலியின் அதிரடி சதத்தால்இந்திய வெற்றி பெற்றது. இலங்கை அணியின் கேப்டன் சனகா அதிரடி சதத்தால் இலங்கை அணி மீண்டு தோல்வியுற்றது. இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகளில் 2-1 என்ற வெற்றிக் கணக்கில் இந்தியவிடம் தோல்வியை தழுவியது. ஓருநாள் தொடரில் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோலுடன் முதல் ஓருநாள் தொடரை நேற்று இலங்கை எதிர்கொண்டது.
இந்தியாவின் வேகபந்து வீச்சாளரான உம்ரான் மாலிக்கின் பந்து வீச்சில் இலங்கை அணி ஆட்டம் கண்டு 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இந்தியாவில் கௌகாந்தியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா முதலாவதாக பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் கேப்டன் ரோஹூத் சர்மா 83 ரன்களையும் கில் 70 ரன்களையும் சேர்த்தனர். அடுத்ததாக வந்த விராட் கோலி தனது நிதான ஆட்டத்தையும் அதிரடியையும் கொடுத்து சதம் விளாசினார் 113 ரன்களை எடுத்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இறுதியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்களை குவித்தது.

கடினமான இலக்கை துரத்திய இலங்கை அணயின் பேட்டர்களை ஆரம்பம் முதலே இந்திய அணியின் வேகபந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளை பறித்தார்.
64 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணிக்காக நிசங்கா – டி சில்வா ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து நிதனமாக ஆடினார். நிசங்கா பொறுப்புடன் ஆடி அரைசதம் விளாசினார். அவருக்கு மறுமுனையில் ஒத்துழைப்பு அளித்த டி சில்வா அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த நிலையில் 40 பந்துகளில் 47 ரன்களில் அவுட்டானார்.
அவரை தொடர்ந்து நிசங்காவும் 72 ரன்களில் ஆட்டமிழ்ந்தார். அடுத்ததாக களமிறங்கிய இலங்கை அணியின் கேப்டன் ஷனகா அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். இவர் 98 ரன்கள் எடுத்திருந்த போது முகமது ஷமி மன்கட் முறையில் அரை வெளியேற்றினார். ஆனால், இந்திய கேப்டன் ரோஹூத் இந்த விக்கெட் வேண்டாம் என்று கூறி சமாதனம் செய்தார். அதனால் ஷனகா சதம் அடித்து இலங்கை அணிக்கு மீட்சியை தந்தார். இவர் 88 பந்துகளில்108 ரன்களை எடுத்தது. இறுதியாக 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்களை சேர்த்தது.
இதையும் படியுங்கள்: INDVSSL: தனது 45வது சதத்தின் மூலம் சச்சின் சாதனையை சமன் செய்த கோலி
இலங்கை அணியின் கேப்டன் சிறப்பான சதத்துடன் ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.