IND W VS ENG W 2022: மூன்று ஓருநாள் போட்டிகளில் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றதால் இந்த ஓருநாள் தொடரை இந்தியா கைப்பற்றி சாதனை படைத்தது.
இந்திய மகளிர் கிரிக்கெட் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடும் வகையில் இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முன்னதாக நடைபெற்ற டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் தோற்றது. இந்த நிலையில் ஒருநாள் தொடரை இந்திய மகளிர் அணி கைப்பற்றியது.
முதலாவது ஓருநாள் தொடரில் ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது ஆட்டம் நேற்று கேன்டர்பரியில் உள்ள செயின்ட் லாரன்ஸ் மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் ருத்தரதாண்டவம் ஆடிய இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்று ஓருநாள் தொடரையும் கைப்பற்றியது.

டாசை வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய மகளிர் அணியினர் முதலாவதாக பேட்டிங் செய்தது. ஆரம்பத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது. ஷபாலி வர்மா (8), யாஸ்திகா பாட்டியா (26) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தனர். ஸ்மிருதி மந்தனா (40) தியோல் 58 ரன்களில் ஆட்டமிழந்தார், ஆனால் ஹர்மன்ப்ரீத் 100 ரன்களை விளாசினார். ஹர்மன்ப்ரீத் கவுர் 111 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 143 ரன்கள் எடுத்தார், இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 5 விக்கெட்டுக்கு 333 ரன்கள் குவித்தது.
கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணியினர் 245 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிக்கொடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து மகளிர் அணியை 88 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றயை கண்டது இந்திய மகளிர் அணி. மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது இந்திய மகளிர் அணி இந்த இரண்டாவது ஆட்டத்தில் தன் அதிரடியால் இங்கிலாந்து அணியினரை கதிகலங்க வைத்துள்ளார் கவுர்.