IND W vs ENG W T20: இந்திய அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்தின் டெர்பியில் உள்ள கவுண்டி மைதானத்தில் இங்கிலாந்து பெண்கள் மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நடைபெற்றது. இந்திய நேரப்படி இரவு 10.30 க்கு மணிக்கு ஆட்டம் தொடங்கியது.
இந்திய பெண்கள் அணி வீராங்கனைகள்: ஹர்மன்ப்ரீத் கவுர் (கேட்ச்), ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், சினே ராணா, தயாளன் ஹேமலதா, சிம்ரன் தில் பகதூர், ராதா யாதவ், ராஜேஸ்வரி கயக்வாட்.
இங்கிலாந்து பெண்கள் அணி வீராங்கனைகள்: ஆமி ஜோன்ஸ் (கேட்ச்), கேட் கிராஸ், சோபியா டன்க்லி, சோஃபி எக்லெஸ்டோன், மியா பௌச்சியர், ஆலிஸ் கேப்ஸி, சாரா க்ளென், பிரையோனி ஸ்மித், இஸ்ஸி வோங், டேனியல் வியாட், லாரன் பெல்.
இதற்கு முன்னர் நடந்த போட்டியில் இந்திய மகளிர் அணி தோல்வியுற்றது. இந்நிலையில், நேற்று நடந்த இரண்டாவது டி 20 போட்டியில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 79 ரன்களை சேர்த்து இந்திய மகளிர் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

முதலில் விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 142 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தனர். அதனை தொடர்ந்து இந்திய மகளிர் அணியின் வீரர்கள் பேட்டிங் செய்ய சென்று 2 விக்கெட்டை பறிக் கொடுத்தனர். அதனை தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா தன் அரைசதத்தை பூர்த்தி செய்து நிதானமாகவும் நல்ல முறையிலும் ரன்களையும் பவுன்டரிகளையும் அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.
அவருடன் பொறுப்புடன் விளையாடி 29 ரன்கள் வரை அடித்து அவுட்டாகாமல் இருந்தார். ஸ்மிருதி மந்தனா 79 ரன்கள் வரை அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். இப்போட்டியில் இந்தயா வெற்றி பெற்றதன் மூலம் 1க்கு 1 என சமன் செய்து இங்கிலாந்துக்கு எதிரான தொடரை சமன் செய்தார்.