IND VS AUS T20: விராட் & ஸ்கையின் அதிரடியால் தொடரை கைப்பற்றியது இந்தியா

0
5

IND VS AUS T20: விராட் கோலி மற்றும் சூர்யக்குமார் யாதவ்வின் அதிரடியால் தொடரை கைப்பற்றியது இந்தியா அணி. ரோஹி்த சர்மா கேப்டன் சீயில் அதிக முறை வெற்றி என்ற சாதனையும் இந்திய அணி என்ற பெயரையும் பெற்றது.

3 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியது. இரண்டாவது போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் போட்டி நடக்குமா நடக்காதா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டு அணிகளும் 1-1 என்ற சம நிலையில் உள்ளதால் மூன்றாவது போட்டி மிகுந்த விருவிருப்பாக இருந்தது.

இந்நிலையில், மூன்றாவது போட்டி ஹைதராபாத்தில் போட்டிகள் துவங்கியது. டாசை வென்ற இந்திய அணி முதலாவதாக பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய வீரர்கள் பேட்டிங்கை தொடர்ந்து கேமரூன் கீரின் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்து இந்திய அணியினரின் பந்துகளை சிதறடித்தார். இறுதியில் புவனேஷ்குமார் பந்தில் அவுட்டாகினார்.

IND VS AUS T20: விராட் & ஸ்கையின் அதிரடியால் தொடரை கைப்பற்றியது இந்தியா

ஆரோன் பின்ச் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். மிடில் ஓவர்களில் யுஸ்வேந்திர சாஹல், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல் ஆகியோர் கட்டுக்கோப்புடன் வீச ரன்வேகம் குறைந்ததுடன் சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளும் விழுந்தன.

ஸ்மித் (9), மேக்ஸ்வெல்(6), மேத்யூ வேட்(1) ஆகிய மூவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, ஜோஷ் இங்லிஸ் ஓரளவிற்கு நன்றாக ஆடி 24 ரன்கள் பங்களிப்பு செய்தார். டிம் டேவிட் டெத் ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் ஆடி 25 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் 20 ஓவரில் 186 ரன்களை குவித்தது ஆஸ்திரேலிய அணி.

இலக்கை நோக்கி பயணத்தை தொடர்ந்த இந்திய அணியின் முதல் தர பேட்டர்களான ராகுல் 1 ரன்களிலும் கேப்டன் ரோகிஹித் 17 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன்பிறகு களமிரஙக்கிய விராட் மற்றும் சூர்யக்குமார் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சூர்யக்குமரார் ஆஸ்திரேலிய பந்துவீச்சுகளை சிதறடித்து அதிரடியாக விளையாடி 69 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடிய கோலி 63 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார். அதற்கடுத்தப்படியாக களமிறங்கிய ஹர்த்திக் தன் சிறப்பான ஆட்டத்தால் 24 ரன்கள் எடுத்தார். இறுதியாக தினேஷ் கார்த்திக் 1 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி 19.5 பந்துகள் என்ற நிலையில் இந்த இலக்கை எட்டி வெற்றி பெற்று சாதனை படைத்தது.

இந்த வெற்றியின் மூலம் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து 9 முறை இருத்தரப்பு டி20 தொடரை வென்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here