தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்தியா அதிரடி வெற்றி

0
2

தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்தியா அதிரடி வெற்றியை பெற்றுள்ளது.

T20 க்கான உலக கோப்பை போட்டிகள் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் வீரர்களின் ப்ளேயிங் லெவனை தீர்மானிக்கும் போட்டிகளாக ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்காவுடனான போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது. கடந்த ஆஸ்திரேலியாவுடனான போட்டிகளில் 1-2 என்ற வெற்றி விகிதத்தில் இந்தியா தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக தென் ஆப்ரிக்காவுடனான போட்டிகள் நேற்று முதல் மூன்று டி20 போட்டிகள் தொடங்கியது. அதில் முதலாவது போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியுள்ளது.

டாசை வென்ற இந்தியா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. ஆட்டம் தொடங்கியவுடனேயே தொடர்ந்து தென் ஆப்ரிக்கா வீரர்கள் 9 ரன்கள் எடுத்த நிலையில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தனர்.

தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்தியா அதிரடி வெற்றி

டி காக்(1), ரூசோ (0) ஆகியோர் அர்ஷ்தீப் சிங்கிடம் தொடக்கத்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தனர். தொடக்க வீரராக இறங்கிய கேப்டன் பவுமாவும் தீபக் சாஹரின் பவுலிங்கில் டக் அவுட்டானார்.

அதன்பின்னர் மார்க்ரம் நிலைத்து ஆடி 25 ரன்கள் அடித்தார். ஆனால் மில்லர் மற்றும் டிரிஸ்டான் ஸ்டப்ஸ் ஆகிய இருவரும் ரன்னே அடிக்காமல் முறையே அர்ஷ்தீப் சிங் மற்றும் தீபக் சாஹரின் பவுலிங்கில் டக் அவுட்டாகி வெளியேறினர். பின்வரிசையில் பர்னெல் 24 ரன்களும், மஹராஜ் 41 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 106 ரன்கள் அடித்தது தென்னாப்பிரிக்கா.

107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சிறிய இலக்கை நோக்கி இந்திய அணி வீரர்கள் களமிறங்கினர். ஆனால் முதலிலேயே கேப்டன் ரோஹித் மற்றும் விராட் இருவரும் அவுட்டாகி வெளியேறினர். ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் நிலைத்து நின்று 17 வது ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்து இந்திய அணியை வெற்றியடைய செய்தனர். இருவரும் அரைசதம் கடந்து அவுட்டாகாமல் இருந்தனர். இக்குறுகிய இலக்கை அடையவும் இவர்கள் மிகுந்த கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.

13 ஓவர்களில் இந்த இலக்கை எட்ட முடியும் இருந்தும் தென் ஆப்ரிக்க வீரர்களின் பவுலிங் மற்றும் பீல்டிங்கால் இந்த இலக்கை அடைய 17வது வரை நேரம் ஆனதாக கிரிக்கெட் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை தொடருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here