மனிஷ் திவாரி: லண்டனில் வசிக்கும் இந்திய தொழிலதிபருக்கு ‘ஃப்ரீடம் ஆப் தி சிட்டி ஆப் லண்டன்’ விருது வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஃப்ரீடம் ஆப் தி சிட்டி ஆப் லண்டன் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் லண்டனை சேர்ந்த இந்திய தொழிலதிபர் மனிஷ் திவாரிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. நிதித்துறையில் அவரது சிறப்பான பங்களிப்பை கெளரவிக்கும் வகையில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா, மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், இந்தியாவின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேரு உள்ளிட்டோர் இந்த விருதை பெற்ற முக்கிய பிரமுகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.