உலக கோப்பை ஆடவருக்கான ஹாக்கி விளையாட்டு போட்டியில் ஸ்பெயினுக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி காணப்பட்டாலும் சரியான திட்டமிடல் மற்றும் ஊக்கம் போன்ற பல பிரச்சனைகளால் உலக கோப்பையை இந்திய அணியால் பெற முடியாத நிலை இருந்து வருகிறது. மேலும், இந்தியாவில் கிரிக்கெட் போன்ற விளையாட்டிற்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் ஹாக்கிக்கு இல்லை என்றே கூற வேண்டும். இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியை பெரும் அளவில் எடுத்து செல்ல தவறிவிட்டோம் என்றே கூற முடியும்.
இதற்கு முன் இந்தியா 1975 ஆம் ஆண்டு உலக கோப்பையை பெற்றது. அதன் பிறகு, ஒரு முறை வெள்ளி, ஒரு முறை வெண்கலமும், ஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை சாம்பியன் பட்டமும், இரண்டு முறை மூன்றாம் இடம் பிடித்த இந்தியா, 40 ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு பதக்கம் கூட வெல்லாத நிலையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், 15வது உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் இந்தியாவில் உள்ள ஓடிசா புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நேற்று 13ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. வருகிற 29ந் தேதி வரை நடைபெற உளளது குறிப்பிடத்தக்கது. இந்த உலக கோப்பை தொடரில் 16 அணிகள் பங்கு பெறுகின்றன.
இதில் இந்திய அணி D பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்பெயின் போன்ற பலம் வாய்ந்த அணிகளும் உள்ளன. உலகத்தர வரிசையில் 6வது இடத்தை பெற்றுள்ள இந்திய ஹாக்கி அணி நேற்று முதலாவதாக ஸ்பெயினை எதிர் கொண்டது ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதையும் படியுங்கள்: Ms Dhoni: சொத்து மதிப்பு மற்றும் அவரிடம் உள்ள கார்களின் விபரம்
இதற்குமுன் நடந்த வேல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை பதிவு செய்தது.
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.