வங்கதேசத்திற்கு எதிரான முதல் இன்னிங்சில் 404 ரன்களை குவித்த இந்திய அணி. ஸ்ரோயாஸ், ரிஷபந்த், புஜாரா, அஸ்வின், குல்தீப் ஆகியோரின் நிதான ஆட்டத்தால் இந்திய அணி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 133 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 404 ரன்களை குவித்துள்ளது.
இந்திய அணி வங்கதேச மண்ணிற்கு 3 ஓருநாள் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கு பெற சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளது. அதில் ஓருநாள் தொடரை வங்கதேசம் பெற்று அசத்தியுள்ளது. 2-1 என்ற வெற்றியின் மூலம் தொடரை கைப்பற்றியது. இதனால் இந்திய ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்திய அணி டெஸ்ட் தொடரையாவது பெறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் 14ம் தேதி தொடங்கிய முதல் இன்னிங்சில் டாஸை வென்ற இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்த போட்யில் இந்திய அணியின் கேப்டனாக ராகுல் நியமிக்கப்பட்டார்.

முதலாவதாக களம் இறங்கிய ராகுல் 22 ரன்களை அடித்து வெளியேறினார். சுப்மன் கில்லும் 20 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய நட்சத்திர வீரரான விராட் கோலி அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1 ரன்களில் ஆட்டத்தை விட்டு வெளியேறினார். 48 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற்றத்தை சந்தித்தது. புஜாரா மற்றும் ஸ்ரேயாசின் கூட்டணியால் இந்திய அணி மீ்ண்டு வந்தது. இவர்கள் நன்றாக நிதானமாக விளாயாடி அரைசதம் கடந்தனர்.
புஜரா சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 203 பந்துகள் வரை நின்று 11 பவுன்டரிகளை அடித்து 90 ரன்களை பதிவு செய்து ஆட்டமிழந்தார். இதனால் முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 278 ரன்களை குவித்தது. இன்று தொடங்கிய ஆட்டத்தில் நிதானமான ஆட்டத்தை வெளியப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் 10 பவுன்டரியுடன் 86 ரன்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார்.
பின்னர், வந்த தமிழக வீரர் அஸ்வின் மற்றும் குல்தீப் இருவரும் இணைந்து இந்திய அணிக்கு நல்ல முன்னேற்றத்தை தந்து வந்தனர். இவர்கள் பார்ட்னர்ஷிப்பில் அரைசதம் கடந்தது. உணவு இடைவேலைக்கு பின்னர் அஸ்வின் அரைசதம் கடந்த நிலையில் 58 ரன்களை பெற்று போது ஆட்டமிழந்தார். குல்தீப் 40 ரன்களை எடுத்த போது ஆட்டமிழந்தார். 15 ரன்களுடன் உமேஷ் யாதவ் ஆட்டமிழக்காமல் இருக்கிறார். சீராஜ் 4 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 133 ஓவர்களை பிடித்து 404 ரன்களை குவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: FIFA WORLD CUP: 6வது முறையாக இறுதி போட்டியில் அர்ஜென்டினா
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.