டி20 உலகக் கோப்பையிலிருந்து இந்தியா அடுத்த வாரம் வெளியேறும்-அக்தர்

0
17

டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. கடந்த இரு போட்டிகளில் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் இனி சூப்பர் 12 சுற்றுக்கு செல்ல ஏறக்குறைய வழியில்லாத நிலை உள்ளது. இதனை அடுத்து பாகிஸ்தான் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் சோயப் அக்தர் பேசுகையில், இந்த வாரம் பாகிஸ்தான் என்றால் அடுத்த வாரம் இந்தியா வெளியேறும் என தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான T20 உலகக் கோப்பைக்கான போட்டிகள் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதில் பாகிஸ்தானுடன் போட்டியிட்ட இந்திய அணி விராட் கோலியின் அதிரடியால் இறுதி 8 பந்துகளில் 28 ரன்களை குவித்து இந்திய அணியை தோல்வியிலிருந்து மீட்டு பாகிஸ்தானுக்கு உலகக் கோப்பை போட்டியில் முதல் போட்டியில் முதல் தோல்வியை தந்தது.

இதையும் படியுங்கள்: பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை வென்றது ஜிம்பாபே அணி

டி20 உலகக் கோப்பையிலிருந்து இந்தியா அடுத்த வாரம் வெளியேறும்-அக்தர்

அடுத்ததாக இந்திய அணி நெதர்லாந்து அணியுடன் நடந்த போட்டியிலும் ரோஹூத், விராட் கோலி, சூர்யகுமார் ஆகியோரின் உதவியுடன் இந்தியா நெதர்லாந்து அணியை தோற்கடித்தது. இப்போட்டியில் இந்த மூவரும் அரைசதம் கடந்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணியினர் ஜிம்பாபே அணியினரை எதிர் கொண்டது அதில் முதலாவதாக பேட்டிங் செய்த ஜிம்பாபே 20 ஓவர் மடிவில் 8 விக்கெட் இழப்பில் 130 ரன்களை எடுத்திருந்தது. இந்த எளிய இலக்கை எதிர் நோக்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் சொற்ப ரன்களில் தொடர்ந்து அவுட்டாகி வெளியேறி பெரும் இடர்பாட்டில் சிக்கினர். இறுதியாக 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்து 1 ரன்களில் தோல்வியை தழுவியது பாகிஸ்தான்.

இதனை அடுத்து ஏறக்குறைய பாகிஸ்தான் அணி இந்த டி20 உலக கோப்பை போட்டியிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் முன்னாள் வேகப் பந்து வீச்சாளரான ஷோயப் அக்தர் பலரை சாடி வருகின்றார்.

தற்போது, பாகிஸ்தான் இந்த வாரம் வந்தால் இந்தியா அடுத்து நடைபெறும் செமியில் தோற்று அடுத்த வாரம் தாய்நாட்டிற்கு வரும் என்று அக்தர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here