india w vs england w 2022: இந்கிலாந்தில் நடைபெற்று வரும் இந்திய மளிர் அணி மற்றும் இங்கிலாந்து அணியின் முதல் ஓருநாள் தொடரில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய மகளிர் அணி மூன்று T20 போட்டிகள் மற்றும் மூன்று ஓருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதற்குமுன் நடந்த T20 போட்டியில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று டி20 போட்டியின் கோப்பையை வென்றது.
இந்நிலையில், நேற்று நடந்த முதல் ஓருநாள் தொடர் போட்டியில் இந்திய மகளிர் அணி இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. முன்னதாக பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் வீரர்களான ஆலிஸ் டேவிட்சன் மற்றும் ரிச்சர்ட்ஸ் சேர்ந்து 61 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அணிக்கு ரன்களை சேர்த்தனர். அதன்பின், சோஃபி எக்லெஸ்டோன் 50 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து மகளிர் அணி 50 ஓவர்களில் 227/7 ரன்களை எடுத்தது.

இந்திய மகளிர் அணி சார்பில் மூத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி, தனது வாழ்க்கையின் கடைசி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறார், 10 ஓவர்களில் 42 டாட் பால்களுடன் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். டாமி பியூமொன்ட்டை (7) வெளியேற்ற ஒரு சிறந்த ஆஃப் கட்டரையும் வீசினார். தீப்தி ஷர்மா (10 ஓவரில் 2/33) நல்ல ஆட்டத் திறனை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணியினரை அவுட்டாக்கினர்.
228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கலம் இறங்கிய இந்திய மகளிர் அணியினர். ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர். ஸ்மிருதி மந்தனா, யாஸ்டிக் பாட்டியா மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆகிய மூவரின் அற்புதமான பேட்டிங் முயற்சிகள் இந்திய மகளிர் அணிக்கு 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைக் கொடுத்தது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது 1-0 என முன்னிலை பெற்றுள்ளனர்.
மந்தனா அதிகபட்சமாக 99 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தார், மேலும் யாஸ்திகா (50) மற்றும் ஹர்மன்பிரீத் (74*) குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தனர்.