ஜி20 அமைப்புக்கு தலைமை ஏற்கும் இந்தியா அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 20 நாடுகளை கொண்ட ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை வருகின்ற டிசம்பர் 1 முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30 வரை தலைமை ஏற்கிறது.
உலகின் டாப் 20 நாடுகளின் சங்கமம் தான் இந்த G20. ஒவ்வொரு ஆண்டும் இந்த டாப் 20 நாடுகளும் சந்தித்துக் கொள்வார்கள். இந்த 20 நாடுகளின் பொருளாதாரம் தான் ஒட்டு மொத்த உலக பொருளாதாரத்துக்கு சமமாக இருக்கும். இப்போதே பாருங்களேன் உலகின் மொத்த ஜிடிபியில், 85 சதவிகித ஜிடிபி இந்த 20 நாடுகளுக்குச் சொந்தமானது. உலகின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 65 சதவிகித மக்கள் இந்த 20 நாட்டைச் சேர்ந்தவர்கள்.
இந்த G20 மாநாடு எப்போதும் ஒரே இடத்தில், ஒரே நாடே நடத்தாது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில், ஒரு நாடு தலைவராக பொறுப்பேற்றுக் கொள்ளும். இந்த தலைவர் நாடு தான், அடுத்த ஆண்டுக்கான அனைத்து G20 சந்திப்புகளை நடத்த வேண்டும். இந்த தலைவர் நாடு நினைத்தால் G20-ல் உறுப்பினராக இல்லாத நாடுகளைக் கூட விருந்தாளிகளாக அழைக்கலாம்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சிஓபி 26-ல் உலக தலைவர்கள் உச்சி மாநாட்டில் நிலையான வளர்ச்சிக்கு புதிய மந்திரத்தை பிரதமர் மோடி வழங்கினார். கார்பன் அளவு குறைக்கப்பட்ட சுத்தமான எரிசக்தி, மற்றும் திறமையான தொழில்துறை வளர்ச்சி, நிலையான விவசாயம் ஆகியவற்றிற்கான இந்தியாவின் முயற்சியானது அனைவருக்கும் நிலையான வாழ்க்கையை உறுதிப்படுத்துகிறது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 2022 டிசம்பர் 1ம் தேதி முதல் ஜி20 தலைவர் பதவியை இந்தியா ஏற்கும். 2023ம் ஆண்டு ஜி20 உச்சிமாநாட்டின் உச்சக்கட்டத்தை எட்டும். இந்தோனேஷிய தலைமையின் கீழ், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கூட்டங்கள், பயிலரங்குகள், கருத்தரங்குகள் மற்றும் நேராக சென்று பார்வையிடும் நிகழ்வுகள் நடைபெறும்.