கமலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியன் 2 படத்தின் ஃப்ஸ்ட் லுக் வெளியீடு

0
7

உலக நாயகன் கமலஹாசனின் 68வது பிறந்த நாளை முன்னிட்டு இந்தியன் 2 படத்தின் ஃப்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு இதனை இயக்குனர் ஷங்கர் தனது டிவிட்டர் கணக்கில் பதிவு செய்து வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

சிறு குழந்தையாக சினிமாக்களில் இடம் பெற்று இன்று உலக நாயகன் என்கின்ற அளவிற்கு சினிமா துறையில் வளர்ச்சி கண்டவர் கமலஹாசன் பன்முகம் கொண்டவராக சினிமா துறையில் மட்டும் அல்லாது அரசியல் துறையிலும் விளங்கி வந்துள்ளார். இந்த உலக நாயனுக்கு பலரும் தனது வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் கூறி வந்து கொண்டு உள்ளனர்.

பல வெற்றி படங்களை எப்போதும் தந்து கொண்டிருப்பவர் சினிமா துறையில் கஷ்டமான வேடங்களிலும் தனது உழைப்பை போட்டு மெனக்கட்டவர். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் இந்த காலகட்டத்திலும் நூறு நாட்கள் கடந்து திரையரங்கில் ஓடிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கமலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியன் 2 படத்தின் ஃப்ஸ்ட் லுக் வெளியீடு

இயக்குனர் ஷங்கரின் உருவாக்கத்தில் இந்தியன் 2ம் பாகம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படம் ஆரம்பித்ததிலிருந்து பல தடங்கல்கள் பல இன்னல்கள் என தள்ளி தள்ளி போய் கொண்டிருந்தது. தற்போது இப்படத்திற்கான பல வேலைகள் முழுமை பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் கமலஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியன் 2 பாகத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டு படக்குழு அவரை பாராட்டி வாழ்த்துக்கள் கூறியுள்ளது. இப்படத்தில் ஜெயமோகன் எழத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தில் சமுத்திரக்கனி, பாபிசின்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் ப்ரித்தி சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கமல் பிறந்தநாளை சினிமா முக்கியஸ்தர்களும் அரசியல் பிரமுகர்களும் அரை சமூக வலைதளம் வழியாகவும் தொலைபேசி வழியாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here