2வது ஆண்டாக சிறந்த அறிவாற்றல் மாணவியாக இந்திய வம்சாவளி சிறுமி தேர்வு

0
19

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் மையம் நடத்திய தேர்வில் உலகின் சிறந்த அறிவாற்றல் மாணவியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நடாஷா என்ற சிறுமி இரண்டாவது முறையாக தேர்வாகியுள்ளார். அமெரிக்காவின் நியூ ஜெர்சியை சேர்ந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த நடாஷா என்ற 13 வயது சிறுமி. இவரது பெற்றோர் சென்னையை சேர்ந்தவர்கள். நடுநிலைப் பள்ளியின் 5வது கிரேட் மாணவியான இவர் கடந்த ஆண்டு ஜான்ஸ் ஹாப்கின்ஸ் நடத்திய திறமை வாய்ந்த இளைஞர்களுக்கான தேர்வில் கலந்து கொண்டார். இதில் இந்திய வம்சாவளி மாணவி வெற்றி பெற்று கெளரவிக்கப்பட்டார்.

indian american student natasha one of the brightest student in world

இதனை தொடர்ந்து இந்த ஆண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேருவதற்கான எஸ்ஏடி மற்றும் ஏசிடி தேர்வில் கலந்து கொண்டார். இந்த தேர்வில் 76 நாடுகளை சேர்ந்த 15300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் சிறுமி நடாஷா அனைத்து மாணவர்களை காட்டிலும் அதிக மதிப்பெண் எடுத்துள்ளார். இதனை தொடர்ந்து உலகின் சிறந்த அறிவாற்றல் மிக்க மாணவியாக 2வது முறை தேர்வு செய்யப்பட்டு நடாஷா கெளரவிக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here