டோனியை தொடர்ந்து சினிமா தயாரிப்பாளரானார் ரவீந்திர ஜடேஜா

0
12

ரவீந்திர ஜடேஜா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டோனி சொந்தமாக பட நிறுவனம் தொடங்கியுள்ளார். முதல் படமே தமிழில் தயாரிக்கிறார். ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இந்த படத்துக்கு எல்ஜிஎம் (லெட்ஸ் கெட் மேரேஜ்) என பெயர் வைத்துள்ளனர். தனது பட நிறுவனம் மூலம் பல்வேறு மொழிகளிலும் படங்களை தயாரிக்க டோனி திட்டமிட்டிருக்கிறார். அவரது இந்த திட்டத்தால் கவர்ந்துபோன மற்றொரு கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவும் அதிரடி முடிவு எடுத்துள்ளார். அதன்படி இந்தியில் படம் தயாரிக்கிறார் ஜடேஜா. இந்த படத்துக்கு ‘பச்சத்தர் கா சோஹ்ரா’ (75 வயது இளைஞன்) என பெயரிட்டுள்ளார்.

after dhoni ravindar jadeja also entered the cine field as a producer

இதில் லீட் கேரக்டரில் சஞ்சய் மிஸ்ரா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நீனா குப்தா, மகன் வேடத்தில் ரன்தீப் ஹுடா, முக்கிய வேடத்தில் குல்ஷன் குரோவர் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தை ஜெயந்த் கிலாட்டர் இயக்குகிறார். இது குறித்து ஜடேஜா கூறியதாவது,

‘விளையாட்டும் சினிமாவும் மக்களிடமிருந்து பிரிக்க முடியாத விஷயமாக உள்ளது. இது சிறந்த பொழுது போக்கு அம்சங்களாகும். விளையாட்டு மூலம் மக்களை மகிழ்வித்த நான் இனி சினிமா மூலமும் மக்களை சந்தோஷப்படுத்த விரும்புகிறேன். அதனால் தான் பட தயாரிப்பில் ஈடுபடுகிறேன்’ என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here