இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக இருந்து வருபவர் ரிஷப் பந்த் நேற்று தனது பிஎம்டபல்யூ காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது அவர் நெடுஞ்சாலையில் இருந்த பாதுகாப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானார்.
இந்திய கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக இருந்து வருகிறார் ரிஷப் பந்த் வங்கதேசத் தொடரிலும் தனது திறமையை நிரூபித்து நல்ல ப்மாமிற்கு வந்தார். இதற்குமுன் நடந்த பல போட்டிகளில் நிதானமான ஆட்டத்தையும் ஓரு அரைசதம் கூட அடிக்க முடியாமலும் திணறி வந்துள்ளார். இந்த நிலையை இந்திய கிரிக்கெட் விமர்சகர்களும் விமர்சித்து வந்தனர்.
நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவுக்காக மேட்ச்-வின்னிங் சதத்தை அடித்த பிறகு, லாடர்ஹில்லில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அதிகபட்சமாக 44 ரன்களுடன் ஒரு அரை சதத்தை கூட பந்த் பெறத் தவறிவிட்டார். டி20 போட்டிகளில் 14, 17, 20*, 27, 3, 6, 6 மற்றும் 11 என்ற ஸ்கோருடன் தனது முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில், வங்கதேசத்திற்கான டெஸ்ட் தொடரில் தனது பழைய நிலைமைக்கு மீண்டு வந்து அதிரடி ஆட்டங்களை ஆடி அரைசதம் கடந்தார். இதன் மூலம் பல விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்திய விக்கெட் கீப்பர்களில் தோனிக்கு அடுத்ததாக 4000 ரன்களை கடந்தவர்களில் ரிஷப் பந்தும் இணைந்தார்.
டெஸ்ட் போட்டிகளிலும் ஓருநாள் தொடர் போல ஆடி அனைவரையும் கவர்ந்து வந்தார். இந்நிலையில், நேற்று டெல்லியிலிருந்து வீடு திரும்பிய போது சாலையின் தடுப்புச் சுவர் மீது அவரது பிஎம்டபல்யூ கார் மோதியது உடனே கார் தீப் பிடித்து எரியவம் தொடங்கி கார் முழுவதுமாக தீக்கிரையானது.
இந்நிலையில், சம்பவம் அறிந்த போலிஸார் அவரை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை மேற் கொண்டனர். விபத்தில் அவருக்கு நெற்றி மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்: 18 குழந்தைகள் பலி இந்திய இருமல் மருந்தே காரணம் உஸ்பெகிஸ்தான்
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.